மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள்.

மத்திய கிழக்கில் 10 இலட்சம் இலங்கையர்கள் - அதிரவைக்கும் புதிய புள்ளிவிவரங்கள்! 
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.  பெப்ரவரி 28, 2026 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,

மொத்தம் 1,007,855 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் தங்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 350,000 
சவுதி அரேபியாவில் 246,139 
குவைத்தில் 175,000 
கட்டாரில் 140,000 
ஜோர்தானில் 14,500 
ஓமானில் 32,000 
பஹ்ரைனில் 13,130 

ஈரான் (35), சிரியா (20), ஏமன் (27),பாலஸ்தீனம் (4)  நாடுகளிலும் சிறிய அளவிலான இலங்கையர்கள் பதிவாகியுள்ளனர்.
ஈராக் தொடர்பான தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் கணிசமான பங்கினை வகிக்கின்றனர். குறிப்பாக வீட்டுப் பணி, கட்டுமானத் துறை, விருந்தோம்பல் (Hospitality) மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றில் அவர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittances) இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குகின்றது.

இந்தநிலையில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் நிலையை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு வெளியிடும் பயண ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், தூதரக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.