இறந்தவர் மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்

கோப்பாய் மத்தி பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கோப்பாய் மத்தி பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன்  வயது(59) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இறந்தவருக்கும்  அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை வாய் தர்க்கமாக மாறி கொலையில் முடிவடைந்துள்ளது.
இறந்தவர்  மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக 37 மற்றும் 63 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக  சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய மீதமுள்ள சந்தேக நபர்களைக் கைது செய்ய கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.