,
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பமானது.
நேற்று பிற்பகல் 4மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6மணிக்கு நிறைவடைந்து மீண்டும் இன்று காலை 6மணிக்கு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்ட கானொளி : https://youtu.be/FkwT5zvjuRE