நீரில் மூழ்கும் மட்டுநகர்!
நீரில் மூழ்கும் மட்டுநகர் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!
அன்பார்ந்த மக்களே, இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம், பொது அமைப்புகள், தன்னார்வ மாக உதவக் கூடியவர்கள் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்டமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியால் ஏற்படட வெள்ளப் பெருக்கு காரணமாக குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
தாழ் நில பகுதிகளில் உள்ள மக்கள் இடைத்தங்கல் முகாம்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மிக மோசமாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் உள்ள சித்தாண்டி, மாவடி மற்றும் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. https://youtu.be/ovgjoupa9gg