,

வடக்கு மாகாணத்தில் 2025/2026 சேவையின் தேவை கருதிய இடமாற்றத்திலும் வருடாந்த இடமாற்றத்திலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கவனத்திற்கு - SMTU 

வடக்கு மாகாணம் இம்முறை சற்று நிதானமாக இடமாற்றம் செய்துள்ளது. அதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் முதற்கண்  பாராட்டுகின்றது.

இருந்தும் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாராபட்டசம் காட்டப்பட்டுள்ளது என எமது சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, சங்கமும் அவதானித்துள்ளது.

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் சேவைக்காலம் (05 வருடங்கள்) குறிப்பிடப்படாமையால், ஆசிரியர் மனவிரக்தி அடைந்துள்ளனர்.

10,15,20  வருடங்கள் ஆசிரியர் சிலர் வெளி மாவட்டமோ வெளி மாகாணமோ செல்லாமல் செந்த இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றல், நகர்ப்புறப் பாடசாலைகளில் இடமாற்றம்  மேற்கொள்ளமை, யுத்த கால நியமனங்களைக் கருத்தில் கொள்ளாமை(2012) இவ்வாறு பல சிக்கல்களை ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவற்றை வடக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்க்கொண்டு வருகின்றது எமது சங்கம். இவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் சாதகமான முடிவை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்காவிடின், இலங்கை தாய்மொழி ஆசிரியர் 2026 ஆரம்பத்தில் முழுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடலாம்.

பாதிக்கப்பட்டவர் உடனே தொடர்பு கொள்ளவும்.

பொதுச்செயலாளர்,  புயல்நேசன், 
SMTU.
11/10/2025.