கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி”

தமிழினப்படுகொலையின் பதினாறு ஆண்டுகளைக்கடக்கின்ற பொழுதுகளில்....
தேச விடுதலைக்கான நம்பிக்கை தரும் கூர்மையிது
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” சற்று முன் (10.05.2025 @ 7.45 pm Canadian Time) பிரம்டன் நகர பிதா மதிப்பார்ந்த பற்றிக் பிறவுண் அவர்களினால் திரைச்சீலை அகற்றி திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றாரியோ மாகாண சபை , கியூபெக் மாகாண சபை உறுப்பினர்கள் , அமைச்சர்கள், பிரம்டன் நகரசபை உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.