‘KANG GAM CHAN’ கப்பல்

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக நேற்றைய தினம்  ( 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.         
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer Helicopter வகைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற போர் கப்பலானது 149.5 மீற்றர் நீளமும், மொத்தம் 262 ​அங்கத்தவர்களை கொண்டதாகும்,

 கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன்  Kuon Yong Gu பணியாற்றுகிறார். 

மேலும், ​இந்த​ போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ​​அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் ‘KANG GAM CHAN’ கப்பல்  நாளைய தினம் (24) இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.