நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் உள்ள மூதாளர்களைப் பார்வையிட்ட மாநகர சபை உறுப்பினர்கள்,மருத்துவர்கள்.
பிரான்சிலிருந்து தாயகம் வருகை தந்த மாநகர சபை உறுப்பினர்கள்.
பிரான்சிலிருந்து தாயகம் சென்ற மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, எமது தயாகப் பிரதிநிதியுடன் இன்று 01.05.2024 கிளிநொச்சி தருமபுரத்தில் அமைந்திருக்கும் நமசிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும் மூதாளர்களைப் பார்வையிட்டனர். அம்மூதாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியதோடு மருத்துவ ஆலோசனையும் கூறி இருக்கின்றனர்.La Courneuve மாநகரசபை உறுப்பினரான திருமதி. சுகுர்னா சிறீகணேஷ் அவர்கள் அங்கு பணி செய்யும் பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்