.

ஜேவிபி கட்சி,தமிழரசுக்கட்சி,பாராளுமன்ற உறுப்பினர்கள்.
 
இருவரும் தலைவர் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட.
ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர் சிறீதரன் இன்னொருவர் ஜேவிபி தலைவர் அனுர
பாராளுமன்றத்தில் அதிக நாட்கள் சென்று அதிக நேரம் பேசியவர்கள் பட்டியலில் அனுரா இடம்பெற்றுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு குறைவான நாட்கள் சென்றவர்கள் பட்டியலில் சிறீதரனின் தலைவர் சம்பந்தர் ஐயா இருக்கிறார்.
ஜேவிபி கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கட்சியில் ஒப்படைக்க வேண்டும். கட்சி அவர்களுடைய செலவுக்கு தேவையான பணத்தை வழங்கும் என்கிறார்கள்.
ஆனால் தமிழரசுக்கட்சியில் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் தமது சம்பளத்தை இவ்வாறு கொடுப்பதில்லை
ஜேவிபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே சொகுசு வாகனம் பெற்று அதை விற்று பணம் சம்பாதிக்கவில்லை.
ஆனால் சிறீதரன் சொகுசு வாகனத்தை விற்று 7 கோடி ரூபா பணம் பெற்றதாக கூறுகின்றனர்.
இது பற்றி கேட்டபோது சொகுசு வாகனம் விற்று வந்த பணத்தில் மாணவர்களுக்கு பென்சில் பேனா வாங்கிக் கொடுத்ததாக கூறினார்.
ஆனால் இதுவரை எத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு கொடுத்தது என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை
அதைவிட சாராய பர்மிட் வாங்கி பினாமி பெயரில் நடத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அது உண்மையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஏனெனில் சாராய பெர்மிட் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலை அனுர அரசு வெளியிடும் என்கிறார்கள்.
குறிப்பு- பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வர விருக்கிறது. எனவே இந்த தேர்தலிலாவது போட்டியிடும் வேட்பாளர்களிடம் பின்வரும் உறுதிமொழிகளை தமிழ் மக்கள் பெற வேண்டும்.
(1) சொகுசு வாகனம் பெற்று அதன் மூலம் 7 கோடி ரூபா பெற மாட்டோம்.
(2) சாராய பெர்மிட் பெற்று பினாமிகளுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்க மாட்டோம்
(3) உறவினர்கள் பெயரை உதவியாளராக போட்டு சம்பளம் பெற மாட்டோம்.
(4) சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் தமிழ் பகுதிகளில் நடமாட மாட்டோம்.
(5) சொத்து விபரங்கள் பதவி காலம் தொடங்கும்போதும் முடிவடையும்போதும் மக்களுக்கு தெரியப்படுத்துவோம்
(6) தொகுதியில் அலுவலகம் அமைத்து மக்களை எப்போதும் சந்திப்போம்.
 
 
 
 
 
 
 
Toutes les réactions :
200தோழர் பாலன், Rathi Thas et 198 autres personnes