​"போய் வா நண்பா... உன் சேவையை இந்த மண்ணும் மக்களும் என்றும் மறக்க மாட்டார்கள்!"

40,000 இதயங்களின் தோழன் -  யாழ். மண்ணின் 'உயிர் காக்கும் இயந்திரத்திற்கு' கண்ணீர் மல்க பிரியாவிடை! 
​இயந்திரங்களுக்கு உயிர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இன்று யாழ். போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவு (Cath Lab) ஒரு உணர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது. ​கடந்த 15 வருடங்களாகச் சளைக்காமல் உழைத்து, சுமார் 40,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காத்து நின்ற அந்த உன்னதமான 'Cath Lab' இயந்திரம் இன்று தனது சேவையில் இருந்து ஓய்வுபெற்றது. 

வெறும் இரும்பல்ல... இது ஒரு உணர்வு!  ​
இன்று அந்த இயந்திரத்தை டிஸ்மேண்டில் (Dismantle) செய்தபோது, அங்கிருந்த உயிரிமருத்துவப் பொறியியலாளர்கள் (Biomedical Engineers) மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கண்கள் கலங்கின. ​"நாங்கள் இதனை வெறும் வயர்களும், சிப்புகளும் கொண்ட ஒரு மெஷினாகப் பார்க்கவில்லை. இத்தனை காலமும் எங்களோடு இணைந்து போராடிய ஒரு சகபாடியாகவே நேசித்தோம்," என பொறியியலாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்தின் இதயத்துடிப்பு! 
​கொழும்புக்குச் செல்ல வழியின்றி தவித்த எத்தனையோ ஏழை எளிய மக்களின் மாரடைப்பு வலியைப் போக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது இந்த இயந்திரம் தான். ​ஆஞ்சியோகிராம் (Angiogram) மூலம் அடைப்பைக் கண்டறிவது முதல்,  ​ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) மூலம் உயிர் காக்கும் ஸ்டென்ட்களைப் பொருத்துவது வரை,
இந்த இயந்திரம் செய்த சாதனைகள் யாழ். மருத்துவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 

ஒரு சகாப்தத்தின் முடிவு - புதிய ஆரம்பம்! 
​இன்று கழற்றப்படும் இந்த இயந்திரம் காப்பாற்றிய ஆயிரக்கணக்கான இதயங்களின் ஆசீர்வாதம் அதன் ஒவ்வொரு பாகத்திலும் கலந்திருக்கிறது. இது ஒரு இயந்திரத்திற்கு நாங்கள் கொடுக்கும் சாதாரண பிரியாவிடை அல்ல... ஒரு உன்னத சேவைக்குச் செய்யும் கௌரவம்!
​"போய் வா நண்பா... உன் சேவையை இந்த மண்ணும் மக்களும் என்றும் மறக்க மாட்டார்கள்!"