ஒரு நினைவு நாள் மட்டும் அல்ல… ஒரு தேசத்தின் இதயத் துடிப்பு.
நவம்பர் 27, 2025
மாவீரர் நாள்.
எங்கள் தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களின் நினைவு நாள்.
என்றோ ஒரு நாள் நமது மாவீரர்கள் கண்ட கனவு நனஙாகும் என்பதனை உறுதியாக நம்புவோம்!.
இன்றைய நாள்
ஒரு நினைவு மட்டும் அல்ல…
ஒரு தேசத்தின் இதயத் துடிப்பு.
உயிரை விட உயர் எனத் தம் மண்ணை நேசித்து
மண்ணோடு கலந்து போன வீர ஆத்மாக்கள்!
உங்கள் பெயர் மட்டும் அல்ல…
உங்கள் நிழலும் நம் வரலாறில் நிலை கொண்டு நிற்கிறது.
நீங்கள் வீழ்ந்த இடங்கள்,
இன்று எங்கள் மனங்களில் எழுச்சியின் தீபமாக ஒளிர்கின்றன.
உங்களின் தியாகம்,
நாம் மறக்கவே மாட்டோம் - வரும் சந்ததிகள் தாண்டி உம் தியாகங்கள் நிலைபெற்றிடும்..