நீங்கள் புறப்படுவதற்கு முன், RATP அல்லது SNCF Connect செயலிகளை (Apps) சரிபார்த்து, உங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும்
பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் (Ile-de-France) பகுதிகளில் வசிப்பவர்களுக்கு , அடுத்த ஒரு வாரத்திற்கு (நவம்பர் 8 முதல் 16 வரை) பொது போக்குவரத்து பயணங்கள் பெரும் சவாலாக அமையப்போகிறது. RATP மற்றும் SNCF இணைப்புகளில் மிக அவசியமான பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுவதால், பல முக்கிய மெட்ரோ, RER மற்றும் டிராம் சேவைகள் பகுதியளவு அல்லது முழுமையாக நிறுத்தப்படுகின்றன.
இன்றைய (நவ. சிறப்புக் குறிப்பு:
இன்று (சனிக்கிழமை) இரவு, Stade de France மைதானத்தில் பிரான்ஸ் - தென்னாப்பிரிக்கா ரக்பி போட்டி நடைபெறுகிறது. இதனால், அந்த மைதானத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து வழித்தடங்களிலும் மிகக் கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
உங்கள் தினசரி பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், இந்தத் தகவல்களைக் கவனமாகப் படியுங்கள்.
1. மெட்ரோ (Métro)
வழித்தடம் 12 (Ligne 12): ஒரு வார முழு முடக்கம்
எப்போது: திங்கட்கிழமை, நவம்பர் 10 முதல் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16 வரை (ஒரு வாரம் முழுவதும்).
பாதிப்பு: Montparnasse Bienvenue மற்றும் Mairie d'Issy நிலையங்களுக்கு இடையே நாள் முழுவதும் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.
மாற்று ஏற்பாடு: இந்தப் பாதையில் மாற்றுப் பேருந்துகள் (bus de remplacement) இயக்கப்படும்.
வழித்தடம் 9 (Ligne 9): நான்கு நாள் முடக்கம்
எப்போது: இன்று, சனிக்கிழமை (நவ. முதல் செவ்வாய்க்கிழமை (நவ. 11) வரை.
பாதிப்பு: Michel-Ange-Molitor மற்றும் Franklin D. Roosevelt நிலையங்களுக்கு இடையே நாள் முழுவதும் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மாற்று ஏற்பாடு: மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும்.
வழித்தடம் 14 (Ligne 14): ஞாயிறு காலை பாதிப்பு
எப்போது: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, அன்று காலை முதல் மதியம் 2:00 மணிவரை (jusqu'à 14h).
பாதிப்பு: முழு லைன் (toute la ligne) முழுவதும் சேவை நிறுத்தப்படும்.
மாற்று ஏற்பாடு: Gare de Lyon மற்றும் Olympiades நிலையங்களுக்கு இடையே மட்டும் மாற்றுப் பேருந்து வசதி செய்யப்படும்.
2. RER
RER A: எப்போது: திங்கள் முதல் சனிக்கிழமை வரை. பாதிப்பு:
Cergy - Le Haut இலிருந்து புறப்படும் அன்றைய முதல் தொடருந்துக்கு (premier train) பதிலாக Maisons-Laffite வரை பேருந்துகள் இயக்கப்படும்.
ஒவ்வொரு மாலையும், இரவு 21:50 மணி முதல் (à partir de 21h50), Cergy - Le Haut மற்றும் Maisons-Laffite இடையே சேவை நிறுத்தப்படும்.
RER B (விமான நிலைய இணைப்பு):
எப்போது: நவம்பர் 14 வரை, தினமும் இரவு.
பாதிப்பு: இரவு 22:45 மணி முதல் (à partir de 22h45), Châtelet Les Halles நிலையத்திலிருந்து Aéroport Charles De Gaulle 2 (விமான நிலையம்) மற்றும் Mitry – Claye செல்லும் பாதைகள் மூடப்படும்.
மாற்று ஏற்பாடு: மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும்.
RER C (மிகக் கடுமையான பாதிப்புகள்): இந்த வழித்தடத்தில் தான் மிக நீண்ட மற்றும் சிக்கலான இடையூறுகள் உள்ளன. நீண்ட கால பாதிப்பு (2026 வரை): ஜனவரி 11, 2026 வரை, Issy நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் (Dourdan la Forêt / Saint-Martin d'Étampes / Massy – Palaiseau நோக்கி) தொடருந்துகள் நிற்காது.
இந்த வார இறுதி (நவ. 8 & 9):
Champ de Mars மற்றும் Saint-Quentin en Yvelines / Versailles Château RG இடையே நாள் முழுவதும் சேவை ரத்து. Choisy le Roi மற்றும் Juvisy இடையே தொடருந்துகள் நிற்காமல் (Direct) செல்லும். இதனால் Athis Mons, Ablon, Villeneuve le Roi ஆகிய நிலையங்கள் இயங்காது.
இரவு நேர பாதிப்புகள் (வாரம் முழுவதும்):
நவம்பர் 30 வரை, ஒவ்வொரு ஞாயிறும் இரவு 23:45 மணி முதல், Saint-Martin d'Étampes மற்றும் Dourdan la Forêt இலிருந்து Gare d’Austerlitz வரை சேவை ரத்து.
செவ்வாய் (நவ. 11) மற்றும் வாரம் முழுவதும் (நவ. 12 முதல்) தினமும் இரவு 22:00 மணிக்குப் பிறகு, Gare d'Austerlitz நிலையத்திலிருந்து Juvisy, Pont de Rungis, Dourdan, Saint-Martin d'Étampes போன்ற பல கிளைகளுக்குச் செல்லும் சேவைகள் நிறுத்தப்படும்.
RER D:
வார இறுதி (நவ. 8 & 9): இரவு 22:50 முதல் காலை 8:50 வரை, Paris Gare de Lyon மற்றும் Creil இடையே சேவை ரத்து. சனிக்கிழமை மட்டும் (நவ. 8): இரவு 11:00 மணி முதல் காலை 9:00 மணிவரை, தெற்குப் பாதைகளான Paris Gare de Lyon இலிருந்து Juvisy மற்றும் Combs-la-Ville நோக்கிய சேவைகள் பாதிக்கப்படும்.
வார நாட்கள் (திங்கள்-வெள்ளி):
இரவு 22:30 முதல், Paris Gare de Lyon மற்றும் Villeneuve Saint-Georges இடையே உள்ள நிலையங்கள் இயங்காது. இரவு 21:00 மணி முதல், Orry la Ville ↔ Goussainville மற்றும் Villeneuve Saint-Georges ↔ Corbeil-Essonnes இடையே சேவை ரத்து.
3. டிராம் (Tramway)
T2 (நீண்ட கால முடக்கம்):
எப்போது: இப்போது முதல் பிப்ரவரி 2026 இறுதி வரை.
பாதிப்பு: பிரான்சின் மிகவும் கூட்ட நெரிசலான டிராம் வழித்தடங்களில் ஒன்றான T2 இல், Porte de Versailles மற்றும் Suzanne Lenglen நிலையங்களுக்கு இடையே சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு: Porte de Versailles செல்ல, Suzanne Lenglen நிலையத்திலிருந்து T3a டிராம் உள்ள Balard நிலையத்திற்கு நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
T14:
எப்போது: வாரம் முழுவதும் (திங்கள் முதல் வெள்ளி வரை), ஒவ்வொரு மாலையும்.
பாதிப்பு: இரவு 21:15 மணி முதல் (à partir de 21h15), முழு லைன் முழுவதும் சேவை நிறுத்தப்படும்.
மாற்று ஏற்பாடு: மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளுக்கான இறுதி அறிவுரை:
இந்த இடையூறுகள் அனைத்தும் பயணிகளுக்குக் கடினமானவை மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை அதிக நேரம் எடுக்கும் மற்றும் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
எனவே, நீங்கள் புறப்படுவதற்கு முன், RATP அல்லது SNCF Connect செயலிகளை (Apps) சரிபார்த்து, உங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அல்லது கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும்.
- சிவா சின்னப்பொடி