.

160 பேருடன் காம்பியாவிலிருந்து, புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மவுரித்தேனியா கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர் பிழைத்தவர்களில் 11 பேர் செனகல் நாட்டவர்களும் 6 காம்பியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
இவர்கள் ஐரோப்பா நாட்டில் புகழிடம் கோரி சட்டவிரோத கடல் பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது