.
அச்சுவேலி அந்தோனியார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு பணங்கள் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2.30 க்கும் 3:00 மணிக்கு இடையில் இடம் பெற்றுள்ளதாக அங்கு பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞன் ஒருவர் ஆலயத்தின் கதவினை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பண உண்டியலை உடைத்து பணங்களை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆலய நிர்வாகத்தினரால் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.