.
இந்திய அரசாங்கம் முன்வைத்த கருத்திட்த்தை ஏற்று, 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் யோக தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் யோகதினம் கொண்டாடப்படுகிறது.
யோகாவை அங்கீகரிக்கும் ஒரு நாளாக சர்வதேச யோகா தினம் உள்ளது. யோகா பயிற்சிகள் உடல் மற்றும் மன நலனுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் காட்டியுள்ளதால், பண்டைய இந்தியாவில் தோன்றிய இந்த நல்வாழ்வு நடைமுறையை உலகளவில் ஊக்குவிப்பது ஐ.நா.வால் முக்கியமானதாகக் கொள்ளப்பட்டுள்ளது.