அதிகாரிகளை இறுதியாகவும் விவசாயிகளின் குறைகளை முதலாவதாகவும் குறிப்பிடுமாறு மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமநல அபிவிருத்தி திணைக்களம் என்ன செய்கின்றது எனவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிக முக்கியமான மாவட்ட விவசாய குழு கூட்டம் நடைபெறுகின்ற பொழுது மாவட்ட கமநல உதவி ஆணையாளர் ஏன் வருகை தரவில்லை எனவும் யாழ் மாவட்ட செயலாளர் சீறிப்பாய்ந்தார்.
நேற்றைய தினம் யாழ்  மாவட்ட விவசாய குழு கூட்டம் இடம்பெற்றது இதன் பொழுது வழமையான கூட்டங்களை போல அல்லாது அதிகாரிகளை இறுதியாகவும் விவசாயிகளின் குறைகளை முதலாவதாகவும் குறிப்பிடுமாறு மாவட்ட பதில்  செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இந்நிலையில் கமநல சேவைகள் நிலைய உழவு இயந்திரங்கள்,நெல் அழிவு  உட்பட பல கமநல அபிவிருத்தி திணைக்களம்சார் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகள் சுட்டிகாட்டினர் .
இதற்கு பொறுப்பு வாய்ந்து பதில் வழங்க வேண்டிய கமநல உதவி ஆணையாளர் கூட்டத்திற்கு வருகை தராத நிலையில் அவருடைய திணைக்களத்தின் சார்பில் வருகை தந்த மற்றுமொரு அதிகாரி சரியான தரவுகளை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது .
தொடர்ந்து தனக்கும் மாவட்டம் சார்ந்து அனைத்து விடயங்களுக்கும் பதில் வழங்க முடியுனாது என தெரிவித்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த மாவட்ட பதில் செயலாளர் அரசாங்கத்தின் மிக முக்கியமான திணைக்களம் கமநல அபிவிருத்தி திணைக்களம் உங்களுக்கு ஒரு விடயம் தெரியாது எனில் அமைதியாக இருக்க வேண்டும் மேலும்  உழவு இயந்திரம் இல்லை திருத்த கேட்டால் பதில் இல்லை விவசாயிகள் திருத்த கேட்டால் அதற்கும் பதில் இல்லை சரியான தரவு இல்லை உங்களுடைய திணைக்கள உதவி ஆணையாளர் இங்கு வரவில்லை ஆகவே இப்படியான உத்தியோகத்தர்களையும் அதிகாரிகளையும் கொண்டிருந்தால் எவ்வாறு நாம் செயற்படுவது என சீறிப்பாய்ந்தார்.