,

இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காசிநாத் செந்தில் புதன்கிழமை (30) மாலை மன்னாருக்கு விஜயம் செய்தார்.

சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்த நிலையில் புதன்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவுக்கு விஜயம் செய்த அவர், குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது  பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

493544118_9613486612034595_2168056058221