ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை 30 ஆக பாகிஸ்தான் குறைக்கும்.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஊடகமான டான் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு, இந்தியாவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையை அறிவிப்பதற்காக கூடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விவாதித்துள்ளது.
அப்போது, பஹல்காம்பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழப்புகளைக் கண்டிப்பதாக கூறி, அதேநேரம் இந்தியாவின் நடவடிக்கையை நிராகரித்தது.
அதை "ஒருதலைப்பட்சமானது, அநீதியானது மற்றும் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டது" என்று கூறியது.
மேலும், இதனால் சிம்லா ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.