,

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் இன்று (07) நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, 

* இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது. 

* தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். 

* இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை. 

* 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே. 

* மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது. 

* மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம் என்றார்.