நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை
நீரின்றி தவிக்கும் நுவரெலியா – லவர்ஸ்லீப் விநாயகபுரம் மக்கள்.
இதனால் மக்கள் அன்றாடம் நீரின்றி தமது கடமைகளை செய்வதில் இன்னல்களை சந்திக்கின்றனர்.பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீரின்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் நுவரெலியா மாநகர சபைக்கு அன்மித்த பகுதிகளில் இவ்வாறான நிலைமையை காணப்படுகிறது. தொடர்ச்சியாக நுவரெலியாவில் கடும் வெப்பமான காலனிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கையும் பாதிப்படைந்துள்ளது.
பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.