வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2026 கனடா
சங்கதிSankathi
விளம்பரம் · 300×66
செய்திமின்னல்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?
சினிமா

அதிக சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி: 5 ஆயிரத்தில் பெரிய ஹிட் கொடுத்த இளையராஜா; இந்த பாட்டை கேளுங்க!

02 நவம்பர் 2024
அதிக சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி: 5 ஆயிரத்தில் பெரிய ஹிட் கொடுத்த இளையராஜா; இந்த பாட்டை கேளுங்க!

.

எம்.எஸ்.வி அதிக சம்பளம் கேட்டதால், இளையராஜாவிடம் சென்ற தயாரிப்பாளர் தனது முதல் படத்தில் பெரிய ஹிட் பாடலை வாங்கியுள்ளார்.

எம்.எஸ்.வி அதிக சம்பளம் கேட்டதால், இளையராஜாவை புக் செய்த ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், காலத்தால் மறக்க முடியாத ஒரு பெரிய ஹிட் பாடலை வாங்கியுள்ளார். அது என்ன பாடல், என்ன படம் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதிய காரைக்குடி நாராயணன், 1978-ம் ஆண்டு அச்சாணி என்ற படத்தை இயக்கி தயாரித்திருந்தார்.

முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்த இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் எம்.எஸ்.வியிடம் சென்றுள்ளார் காரைக்குடி நாராயணன்.

அப்போது பிஸியாக இருந்த எம்.எஸ்.வி, உங்கள் படத்திற்கு இசையமைக்கிறேன். என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை வைத்து சம்பளம் என்ன என்று பேச சொல்லியுள்ளார்.

அப்போது காரைக்குடி நாராயணனிடம் பேசிய எம்.எஸ்.வி உதவியாளர் அண்ணன் இப்போது ரூ40 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். நீங்கள் அந்த சம்பளம் கொடுத்தால் மேற்கொண்டு பேசலாம் என்று சொல்ல, இதனால் அதிர்ச்சியடைந்த காரைக்குடி நாராயணன், நான் பைனான்சியரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வெளியில் வந்து உடனடியாக இளையராஜாவிடம் சென்றுள்ளார்.

அப்போது அன்னக்கிளி உள்ளிட்ட 2 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த அச்சாணி படம் இவருக்கு 3-வது படம். இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட இளையராஜா என்ன சம்பளம் என்று கேட்க, ரூ5000 என்று சொல்ல, இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுக்க கூடாதா என்று கேட்க, அதன்பிறகு ரூ8 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு இந்த படத்தின் கம்போசிங் தொடங்கிய நிலையில், வாலி எழுதிய படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘மாதா உன் கோவிலில்’ என்ற பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது.

எம்.எஸ்.வி ரூ40000 சம்பளம் கேட்டதால், இளையராஜாவை புக் செய்த இயக்குனரும் தயாரிப்பளருமான காரைக்குடி நாராயணன், தான் இயக்கிய முதல் படத்திற்காக காலத்தால் அழியாத பாடலை வாங்கியுள்ளார். எஸ்.ஜானகி பாடிய இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்று இன்றும் நிலைத்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்