வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2026 கனடா
சங்கதிSankathi
விளம்பரம் · 300×66
செய்திமின்னல்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?
உலகம்

இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் – போராடி மீட்ட பொலிஸார்

20 செப்டம்பர் 2024
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் – போராடி மீட்ட பொலிஸார்

.

இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார்.

ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் அது விட்டுவிடும் என நினைத்து அதன் தலையை பிடித்தேன் ஆனால் அது என்னை மேலும் இறுக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

அயலில் உள்ள ஒருவர் இறுதியாக எனது அலறலை செவிமடுத்து உதவியை கோரினார் என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளேயிருந்த மெல்லிய அலறல் கேட்டதை தொடர்ந்து அரோமின் கதவை உடைத்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்,நீண்டநேரமாக அவரை மலைப்பாம்பு அவரது கழுத்தை நெரித்து வைத்திருக்கவேண்டும் ஏனென்றால் அவரின் உடலின் நிறம் மாறியிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அது பெரிய மலைப்பாம்பு,அவரது காலில் பாம்பு கடித்த அடையாளத்தை பார்த்தேன் வேறு பகுதிகளிலும் கடித்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நான்கு அடி நீளமான 20 கிலோ எடையுடைய மலைப்பாம்பின் படங்கள் வெளியாகியுள்ளன.

 

 

Share.FacebookTwitterPinterestLinkedInTumblr

சமீபத்திய செய்திகள்