மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்.
மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்.
இன்று வியாழக்கிழமை வெளியான அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் அத்துரலியே தேரர், இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம் சமூகத்தைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் அவதானிக்கிறாா் என்பதை அறிய முடிகின்றது.
முஸ்லிம் மதரசா (Madrasa) பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாமியப் பாடநெறிகளை தேரர் முஸ்லிம் அடிப்படைவாதக் கல்வியாகவும் அக் கல்வி பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை போகலாம் என்ற தொனியிலும் கருத்திட்டிருக்கிறார்.
அந்தச் செய்தியில் முஸ்லிம்கள் தொடர்பாகத் தேரர் சுட்டிக்காட்டிய விபரங்களை அப்படியே தருகின்றேன். அவை பின்வருமாறு,
‘ நாட்டில் பல இடங்களில் அடிப்படைவாத பாடசாலைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் நாம் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கல்வியை வழங்குபவர்கள் யார்? சலுகைகளை வழங்குவது யார்? என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்‘