.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி இன்று (29) திங்கட்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு காலை 10.00 மணிக்கு சமுகமளிக்குமாறு புலனாய்வுத்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு அமைய சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Oruvan