ஜனாதிபதி அநுரவுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்த மோடி; அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் புறப்பட்டார்!
கொழும்பில் போராட தடை- நீதிமன்றின் உத்தரவு!

மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்புஇந்திய பிரதமரால் திறந்து வைப்பு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்குமுன்பு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார். இதனுடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா - ஓமந்தை ரயில் பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
eye-one சிறப்பு புகைப்படத்தை மோடிக்குவழங்கிய சஜித்
வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்புபுகைப்படத்தை, நேற்று (05) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பில் வழங்குவது பெரும் கௌரவமாகும். ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பானவிலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.
அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது— ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை— ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கானசின்னமாகும். எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும்அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்குஅமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில்இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை – இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு உறவுகுறித்து பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை!
இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத்துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல தசாப்தங்களாக பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேணி வருவதுடன், பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்புஉறவுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்..குறிப்பாக, இந்தியா ஆண்டுதோறும் இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு விடயதானம் சார்ந்தபயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் போராட தடை- நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பில் இன்று (05) முன்னணி சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, புபுது ஜயகொடஉள்ளிட்ட தரப்பினர் நடாத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை நீதவான்நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் அதன் உறுப்பினர்கள் நுழைவதைத் தடை செய்துஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரவுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்த மோடி; அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் புறப்பட்டார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்தபிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் நோக்கிபுறப்பட்டார். இந்நிலையில், தனது வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இருநாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளைமீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும் என இந்தியப்பிரதமர் தெரிவித்துள்ளார்.