இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திலும் ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும்.
,

இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திலும் ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும்.
ஆரியம் காந்தி சிலை நிறுவும் திராவிடம் பெரியார் சிலை நிறுவும் இரண்டும் சேர்ந்து சிங்கள அரசு அமைக்கும் சட்டவிரோத புத்தர் சிலையை ஆதரிக்கும்.
திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் "பாசன பப்பாதராஜமஹா விகாரை" என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்
திருகோணமலை முகத்துவாராம் பிரதேசத்தில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவிலை அழித்து அந்த கோவில் சூழலில் "லங்காபட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை ஒன்றை கட்டி இருக்கின்றார்கள்
காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலய சூழலில் "கெமுனு விகாரை" என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவிஇருக்கிறார்கள்
முல்ல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை உடைத்து வீசிவிட்டு அங்கு "குறுந்தூர் விகாரை" என்கின்ற பெயரில் விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி "குருகந்த புராண ராஜ மகா விகாரை" என்கின்ற பேரில்விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்
வவுனியா வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விக்கிரங்களை சேதப்படுத்தி அது "வட்டமான பர்வத விகாரை" என்கின்றபௌத்த தொல்லியல் நிலம் என உரிமை கோருகின்றார்கள்
தென்னவன்மரபடி கந்தசாமி மலை முருகன் ஆலய பூசை வழிபாடுகளை தடை செய்து விட்டு அது "சங்கமலை விகாரை" க்குரிய நிலம் என உரிமை கோருகின்றார்கள்
திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலயத்தை சிதைத்து விட்டு அங்கு "கொட்டியாராம ஸ்ரீபத்ர தாது ராஜ மகா விகாரை" என்கின்ற பெயரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்
திருகோணமலை சூடைக்குடா மலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை அழித்து அங்கும் விகாரையொன்றைகட்டியிருக்கின்றார்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் பாரம்பரிய முன் கதவு , மூலஸ்தான விக்கிரம்என்பவற்றை அடித்து நொருக்கியிருக்கின்றார்கள்
வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பனவற்றை சேதப்படுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் .