Archive for the ‘வீரமறவர்கள்’ Category

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 8ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். அவர், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள்!

26 வருடங்கள் அயராது உழைத்த விடுதலைப் புலிகளின் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .!

உளவுத்தலமைக்கு  கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே  உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே  காத்தவனே.!வெளிவராத  இரகசியங்களின்  வெளிச்சம்  இவனே.!

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட கேணல் வசந்தன்

கேணல் வசந்தனின் வீரவணக்க நாளும் சிறு வரலாற்று குறிப்பும். மாவீரர்களின் வீர வரலாறு கேணல் வசந்தன்  ஆறுமுகம் அன்பழகன்  தமிழீழம் (மன்னார் மாவட்டம்)  தாயக மடியில்:10-05-2009

மாமனிதர் சிவராமின் 11ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

தரும்புரத்தில் ஓர் இந்திரன் அவன் தான் எங்கள் இளவாணன் அண்ணா !-7ஆம் ஆண்டு நினைவு நாள்

சோழன் வாணிபத்தில் வலம் வந்து மருதம் வாணிபத்தை ஆண்ட இளவரசனும் இவனே.mதான் ஒரு பணிப்பாளர் என்ற அந்தஷ்த்தை கொஞ்சமும் காட்டி கொடுக்காமல் ஒரு சாதாரண பணியாளன் போல் எம்மை அன்பாக ஆளுமையாக வழிநடத்தும் பாங்கு மிகப்பெரும் சாதனையாக இருந்தது இந்த வீரனிடம்.

ஆனையிறவு மீட்புச் சமரின் 16 வது ஆண்டின் நிறைவு நாள் – 21/04/2016

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினம்

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

லெப் கேணல் கலையழகன் நினைவு நாள் இன்று (18.04.2007)

முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகனின்  9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 25 வது ஆண்டு !

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு 04.14 இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான போராளிகள் எழுதுமட்டுவாள் தளத்தில் ஒன்றுகூட்டப்பட்டு, 1200 1200 போராளிகளைக் கொண்ட தாக்குதல் அணியும் 300 போராளிகளைக் கொண்ட கனரக ஆயுத அணியும் ஒண்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த படைப்பிரிவாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் […]

ஆனந்தபுரம் முற்றுகைச்சமர் முன்னைநாள் பெண் போராளி வாக்குமூலமாக !

விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் நீலன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப்போராட்டம் கடின பாதையில் மக்கள் மீது ஆழமான பற்றுக்கொண்ட அசையாத வீரம் கொண்ட பல வீரர்களை கண்டெடுத்து தனது அத்திவாரமாக்கியுள்ளது. அந்த வகையில் தனது உயிர் உடல் ஆன்மா ஆகியனவற்றை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு என்று ஆகுதியாக்கிய ஒரு உன்னதமான மாவீரனே லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள் ஆவார்.

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! – வல்வை அகலினியன்

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..

கேணல் கோபித் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள்!

எங்கள் கேணல் கோபித் அண்ணா இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !

மேஜர் யாழிசை

தமிழீழத்தில் முல்லைத்தீவு மாங்குளத்தில் பிறந்த துவாரகா இவள் விளையாடித் திரிந்த வீதிகள் எங்கும் பகைவனின் காலடிகளும், நகரில் பகைவனின் இனவெறி தாண்டவங்களும் நிறைந்திருந்த காலம். சில வேளைகளில் எதிரியானவன் தமிழர்களை வீதிகளில் அடிப்பதும் சித்திரவதை செய்வது அவ்வப்போது அந்த நகரில் நடக்கும் வழமை ஆகியது.

லெப் கேணல் ஜொனி அவர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!

லெப்டினன்ட் கேணல் ஜொனி அவர்களின் 28ம் ஆண்டு (13.03.2016) நினைவு நாள் இன்றாகும், இந்தியாவில் இருந்து  அமைதிப்படை எனும் பெயரில் வந்து தாயகத்தில் பல கொடுமைகளை செய்த இந்திய இராணுவம் ஜொனி அவர்களை பயிற்ச்சி என அழைத்து சுட்டுக்கொன்றது. இப்படி எத்தனையோ நய வஞ்சக செயலை செய்தது இந்திய அரசு.

பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 7வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்}  பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு (10.03.2016) வீரவணக்க நாள் இன்றாகும்.

புலிகளின் தலைமையைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன்

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும்.தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெற்றிகரத் தாக்குதலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}