Archive for the ‘செய்திகள்’ Category

ஈழத்தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை உலகுக்கு முரசறையட்டும் : எழுகதமிழுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டறிக்கை !

எழுகதமிழ் எச்சிக்கூடல், உரிமை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்களது உணர்வின் வெளிப்பாடு என தங்களது தோழமையினை தெரிவித்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா விவகாரம் : வியாழன்று மற்றுமொரு உப நிகழ்வு !

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையில் 33வது கூட்டத்தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்தி மற்றுமொரு உப நிகழ்வொன்று வியாழன்று இடம்பெறவுள்ளது.

மே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்

அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன அழிப்பை செய்து முடித்தது. மே17,18 ஆகிய நாட்களில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

யாழ்.குடாநாட்டின் புகழ் சரித்திரப்புகழ் மிக்கதாக மாறவேண்டும்-மா.இளஞ்செழியன்

யாழ்.குடாநாட்டை சிறந்த ஓர் சரித்திரப் புகழ்கொண்ட இடமாக மாற்றி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைத்து செயல்பட்டால் சாதித்து காட்ட முடியும் என மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்’ என்ற பெயரால் கடந்த 7–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுங்கள், பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!

இலங்கையில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் தமது இரங்கலை வெளியிட்டுள்ளது.

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபுத் திங்கள்! ஹரி ஆனந்த சங்கரி பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்தார்!

‘கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம் செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் வெள்ளியன்று (மே-20) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ் மக்கள் தமது செழுமை வாய்ந்த தமிழ் பண்பாடு,கலாசாரம்,மொழி மற்றும் வரலாற்றை சார்ந்து விழாக்களைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது’ ஆனந்த சங்கரி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையைப் பாராட்டி, கனடியத் தமிழர் பேரவை […]

பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம்

கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரோமில் இருந்து தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும் – அரசாங்கத்திடம் எதிர்கட்சித்தலைவர் கோரிக்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் – ஜெயலலிதா, கருணாநிதி கருத்து

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியதற்கான அங்கீகாரம்தான் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக மற்றும் திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம்தான் என திமுக தலைவர் கருணாநிதியும், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு தெற்கில் இருக்கும் உரிமை சிங்கள மக்களுக்கு வடக்கில் இருக்க வேண்டும்: சம்பிக்க

சிங்கள மக்களுக்கு வடக்கில் வாழ்ந்து, அங்கு கல்வி கற்று, விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என்றால் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தினால் எந்த பலனும் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் இதயத்தில் இருந்து……ஜெயலலிதாவிற்கு சிறீதரன் வாழ்த்து

ஈழத்தமிழர்களின் தொப்புக் கொடித் தேசமாக விளங்குகின்ற தமிழகத்தினுடைய மாண்புமிகு முதல்வராக தாங்கள் வெற்றி பெற்று அரியணை அமர்வதும், தங்கள் ஆட்சி மலர்வதும் ஈழத்தமிழர்களாகிய எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி நேற்று வியாழக்கிழமை(19) பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்

முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த நாட்கள் சிங்கள இன வெறியர்களின் உச்சகட்ட தமிழின அழிப்பு அரங்கேறி இன்றுடன் (18.05.2016 புதன்) ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்! (விபரம் இணைப்பு)

தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்: கொந்தளித்த சீமான்

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு 220 கோடி ரூபா உதவி வழங்குகிறது ஜப்பான்

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

தனி தொகுதிகளில் சாதனை பெற்றது அதிமுக

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அதிமுக இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது.

இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் கிளர்ச்சிக்கு போர் வடிவம் கொடுத்தனர்: துரைராஜசிங்கம்

தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு போர் வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}