Archive for the ‘கட்டுரைகள்’ Category

முள்ளிவாய்க்கால் இறுதிக்கணங்கள் – நிலவனுடன் நேர்காணல்

அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும்இ நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் ஈழத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரும், கவிஞரும், எழுத்தாளரும்,  சுயாதீன ஊடகவியலாளருமா நிஜத்தடன் நிலவன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அவலத்தின் சாட்சியங்களுள் ஒருவன். ஈழத்தவர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாளை இன்றைய தருணத்தில் மீட்டிப் பார்ப்பதில் ஒவ்வொரு ஆத்மாவும் சொல்லும் கதைகள் அதிகம். அந்தவகையில் போரின் சாட்சியமாக இறுதி யுத்த சாட்சியமாக இந்த நேர்காணலை பதிவு செய்கின்றோம்.

முள்ளிவாய்க்காலை நேற்றோடு மறந்து விடுவோமா?

தமிழ் ஈழ மக்கள் மாத்திரமின்றிஇந்த உலகமே இந்த நூற்றாண்டில் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. அதன் அடையாளமும் வீச்சும் உலகில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் நடந்த நினைவு நிகழ்ச்சிகளில் எல்லாம் சர்வதேச அரசியல் தலைவர்கள்சிலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் கொடூரத்தைப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பது ஆகும். அதற்கேற்ப நாமும் நடக்கிறோமா?

புலிகள் மௌனித்தும் ஏழு ஆண்டுகள்..! – ஜெரா

இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாள். மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்தும் ஏழாண்டுகள் கடக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் இதுபோன்றதொரு நாளில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம், தம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தது. பெரும் போர். பல நாடுகள் நேரடியாகக் களமிறங்கி நடத்திக்காட்டிய போர். பிணக்குவியலுக்கு மேல் நின்று சமராடிய போர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் மரணமும், ஆற்றவே முடியாத காயங்களும் வந்து கொண்டிருக்கையில்தான் புலிகள் இயக்கம், “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என்றார்கள்.

‘மே 17 மறக்கமுடியாத இன்றைய நாள் – ஆதிலட்சுமி சிவகுமார்

2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர்.

இன அழிப்புக்கு எதிராக போராடியவர்களையும் அழித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை!

மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால் நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மாபெரும் அவலமாக, மாபெரும் இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக இனப்படுகொலை கருதப்படுகின்றது. ஈழத் தமிழர்களின் விடயத்தில், ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் விடயத்தில் இந்தப் பார்வைகள் மாறுபட்டடிருப்பதை இந்தக் காலகட்டம் உணர்த்துகிறது.

முள்ளிவாய்கால்’: முடிவும், ஆரம்பமும்

முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதே வேளை தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தை பெறுகிறது. ஆனால் இது தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்றால் வழமைபோல சோர்வு ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது.

இனப்படுகொலை நினைவில் புலிகளும் மக்களும் வேறுவேறல்ல!

இன்றைக்கு மே 17. ஈழத்து மக்களின் வாழ்வில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் இதுவும் ஒன்று. தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இழப்பு. மாபெரும் துயரம். மாபெரும் மனித அழிப்பு. சிங்களப் பேரினவாத அரசு தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க நிகழ்த்திய மாபெரும் இன அழிப்புச் செயலே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. எனவே இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக இன்று எம் இனம் போராடுகிறது.

முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்….விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! – ஈழத்து நிலவன்

முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது.

தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா?

வடக்குக் கிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பங்களிப்பு வழங்கவேண்டும் என்றும் இவ்வாறு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை முதலீடுகளைச் செய்ய முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்து இத்தகையதொரு அழைப்பு வருவது நல்லதொரு விடயமே. இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான வகையில் தமிழர் தாயகப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் உள்ள தடைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி […]

போர் வெற்றி விழாவும் நல்லிணக்கமும்

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியடையும் பின்னணியில், ஒருபுறம் போர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தென்னிலங்கை தயாராகிக்கொண்டுள்ளது. மறுபுறத்தில் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர வடக்கு கிழக்கு மக்களும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஏழு வருட காலப் பகுதியில் கூட, இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதையும், துருவமயப்பட்ட நிலை இன்னும் தொடர்கின்றது என்பதையும்தான் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையை முடிவுக்குக்கொண்டுவந்து உண்மையாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எதனையாவது செய்யுமா என்ற […]

மாவீரர்களுக்கான ‘மே 18′ நினைவு தீபம் : “புலி நீக்க – நினைவு அழிப்பு” அரசியலுக்கு எதிரான மக்களின் ஒட்டுமொத்த எதிர்வினை.

தமிழின அழிப்பின் ஆறாவது ஆண்டை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல நாம் தொடர்ந்து இ;னஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சிங்களம் மட்டுமல்ல பிராந்திய – மேற்குலக சக்திகளுடன் எமது அரசியல்வாதிகள் மற்றும் பல அரசியற் செயற்பாட்டாளர்களும் காரணம் என்பதை இன்றைய நாளில் வரலாறு அழுத்தமாகப் பதிவு செயதுகொள்கிறது.

இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான் – நிலாந்தன்

இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஷ;டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக  மாற்றுவதென்றால்  அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் அல்லது பேரிழப்பு  இனிமேலும் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  இவ்வாறு  இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்பது என்பது  ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை  […]

வட்டுக்கோட்டை தீர்மானமும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும்!

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும்.

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரரே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறீலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது.

வருமா மாற்றம்..?

தமிழக தேர்தலுக்கு இன்னமும் ஓரிரண்டு நாட்களே இருக்கின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு தேர்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஒரு மாநிலத்தின் சட்டசபைக்கான தோதல் என்றாலும்கூட இதன் மூலம் எவர் வருவார்கள் என்ற படபடப்பு 2011 சட்டசபை தேர்தலை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இன்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல்வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில்வரலாற்றுத் திருப்புமுனை நாள்.

வெல்லப் போவது யார்? – சி. சரவணன்

1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது.

வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா? பதில் கொடுங்கள் தமிழ் மக்களே!

எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது.

சட்டத்திடம் சூடு வாங்கிய ஆஸ்திரேலியா!

மூக்கிருக்கும்வரை சளியிருக்கும் என்பதுபோல ஆஸ்திரேலியா என்ற கண்டம் தீவாக இருக்கும்வரை அகதிகள் பிரச்சினை இருந்துகொண்டுதானிருக்கும். ஆக மொத்தம், தீர்வுகாணப்படமுடியாத சிக்கல்.

ஐந்து தலைமுறை கண்ட பூர்வீக கிராமமான வலைஞர் மடத்தின் இந்த நிலைக்கு காரணம் என்ன

யுத்தம் தந்த வலிகள் எமது மண்ணில் இருந்து இன்னும் அகலவில்லை. வடக்கின் பல மாவட்டங்களில் இன்றும் போரின் வடுக்களை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அபிவிருத்தி, கல்விக்கான உதவிகள், தொழில் வாய்ப்புக்கள் என என்ன தான் அரசாங்கம் கூறிக கொண்டாலும் அவை எல்லா மக்களுக்கும் கிடைத்தாக இல்லை. வடக்கில் பல சவால்களுக்கு மத்தியில் பல மாணவர்கள் சாதித்து வரும் நிலையில் சில கிராமங்களில் பாடசாலைகளே இருந்த இடம் தெரியாது அழிந்து மறைந்து செல்கின்ற அவலநிலை தொடர்கிறது. நாளைய தலைவர்களான நல்லதொரு […]

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}