Archive for the ‘உலகச் செய்திகள்’ Category

14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு! ரூ. 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

ஓட்டு இயந்திரம் முன் அப்படி என்னதான் யோசித்திருப்பார் விஜய்?

பொதுவாக வாக்களிக்கும் எந்திரத்துக்கு முன் வந்துவிட்டால், சட்டுபுட்டென்று வாக்கைச் செலுத்திவிட்டு நடையைக் கட்டுவது பிரபலங்களின் வாடிக்கை. நடிகர் விஜய்யும் அதற்கு விலக்கல்ல. ஆனால் இந்த முறை வாக்களிக்கும் இயந்திரத்துக்கு முன் வந்ததும் அவர் உடனே வாக்களித்துவிடவில்லை. காலை 10.45 மணிக்கு வாக்குச் சாவடிக்கு வந்த அவர், விரலில் மை வைத்துக் கொண்டு வாக்களிக்கும் இயந்திரம் முன் போனதும், யாரையும் திரும்பிப் பார்க்காமல், சற்று நேரம் யோசித்துக் கொண்டே நின்றார்.

ஒரே பாட்டி இரு கட்சி விளம்பரத்தில் : பாட்டியை ஏமாற்றிய கட்சிகளா? கட்சியை ஏமாற்றிய பாட்டியா?

ஒரு விளம்பரத்தில் எதிராகவும் ஒரு விளம்பரத்தில் ஆதரவாகவும் பேசும் கஸ்தூரி பாட்டி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இப்படியும் ஒரு மகள்..!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

விமான விபத்துக்கு பின் நேதாஜியை சந்தித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி பண்டிட்.. திடுக் தகவல்

சர்ச்சைக்குரிய விமான விபத்துக்குப் பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், ரஷ்யாவுக்கான தூதர் விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் நேரில் சந்தித்ததாக திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிய விரும்­பாத ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோ­த­ரிகள்

தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும் மாடிப் படி­களில் வேக­மாக ஏறி இறங்­கவும் முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தவும் கற்றுக் கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி வரு­கின்­றனர்.

ஐஸ்கிரீம் தீர்ந்து விட்டது; கலியாணம் நின்று விட்டது!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் இல்லாததால் இருவீட்டார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்

டுபாய் கடற்­க­ரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்­ல­மாக அழைக்­கப்­படும் கட­லுக்கு கீழாக அமைந்த படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மிதக்கும் விடு­முறை வாசஸ்­த­லங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்? 4,500 கோடி இலங்கை ரூபாய்க்கு அதிபதியான புலம்பெயர்ந்தவர்! ஆனால் இலங்கையர் அல்ல

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

விமானத்தில் தாய்ப்பாலை கொண்டு செல்வது குற்றமா?: ஒரு தாயாருக்கு நேர்ந்த சோக சம்பவம்

பிரித்தானிய நாட்டில் தாயார் ஒருவர் தனது பிள்ளைக்காக 14 லிற்றர் தாய்ப்பாலை கொண்டு சென்றதை தடுத்து நிறுத்தி கீழே கொட்ட வைத்துள்ள விமான நிலைய அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து பலர் பலி!

பிரே­சிலின் ரியோ டி ஜெனி­ரோவில் கடற்­க­ரை­யோரம் கட்­டப்­பட்ட மிதி­வண்டி பாலம் இடிந்து விழுந்­ததில் 2 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 2016ஆம் ஆண்­டுக்­கான ஒலிம்பிக் போட்­டிகள் பிரேசிலில் எதிர்­வரும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்­க­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டுகள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிம்பிக் சுடரேற்றல்: சுவாரஸ்யத் தகவல்கள்

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமானதோர் அம்சம், போட்டிக்காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் சுடர்.

உலகத்திலே செல்வாக்குமிக்க 100பேர் – ரைம்ஸ் பத்திரிகை

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ரைம்ஸ் பத்திரிகை உலகத்திலே செல்வாக்கு மிக்க 100பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

செவ்வாயில் உருளைக்கிழங்கு

விண்வெளி வீரர்களின் உணவு தேவைகளுக்கு அங்கேயே பயிர் செய்ய ஆராய்ந்து வருகிறது நாசா.

அமெரிக்க நாணயத்தில் முன்னாள் அடிமையின் படம்

அமெரிக்காவின் இருபது டாலர் நாணயத் தாளில் புதிதாக இடம்பெறவுள்ளவர் ஹரியட் டப்மான்.

காட்டில் 9 நாட்களாக சிக்கியிருந்த மூதாட்டியை காப்பாற்றிய நாய்!

காட்டுப் பகு­தி­யொன்றில் 9 நாட்களாக சிக்­கி­யி­ருந்த 72 வயது பெண்­ணொ­ரு­வரின் உயிரைக் காப்­பாற்ற அவ­ரது நாய் உத­விய சம்­பவம் அமெ­ரிக்க அரி­ஸோனா மாநி­லத் தில் இடம்­பெற்­றுள்­ளது.

உண்ணப்படக் கூடிய திருமண ஆடை

பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர்.

ஜெர்மனியில் சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு !!

மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

டயானா 24 வருடங்களுக்கு முன்னர் தனியாக அமர்ந்த தாஜ்மஹால் பெஞ்சில் அமர்ந்து படம் எடுத்த விலியம்ஸ் கேட் தம்பதியர்

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டுடன், 24 வருடங்களுக்கு முன்னர் தனது தாயார் இளவரசி டயானா இந்தியாவின் தாஜ் மஹாலுக்கு முன்பாக உள்ள பெஞ்சில் அமர்ந்து படம் எடுத்த அதே பென்சில் அமர்ந்து நேற்று சனிக்கிழமை படம் எடுத்தார்.

ஆண், பெண் மாணவர்கள் பேச தடை விதித்துள்ளது – பாகிஸ்தான் ஸ்வாட் பல்கலைக்கழகம்

பாகிஸ்தானில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசவோ, அல்லது ஒன்றாக நடக்கவோ ஸ்வாட் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}