விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்காவில் நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கருணாகரன் கந்தசாமி என்ற ஈழத்தமிழரை நியுயோர்க் நகர நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 55 வயதான கருணாகரன் கந்தசாமிக்கு எதிராக தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.
ஆனால் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, 5 ஆண்டுகள் சிறையில் இருந்தது போதுமானது என்று தீர்ப்பளித்து, கருணாகரன் கந்தசாமியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் வாகனச் சாரதியான இவர் சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இராணுவம் சாராத – மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே தொடர்புபட்டிருந்தார் என்று நம்புவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


Posted in