பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகளை நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வில் பங்கேற்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றிரவு பிரித்தானியாவுக்கு செல்கிறார்.
தாய்லாந்தில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார். இரண்டாவது எலிசபெத் மகாராணியை கௌரவித்து கொமன்வெல்த் செயலாளர் கமலேஸ் சர்மா அளிக்கவுள்ள விருந்துபசாரத்தில் அவர் கலந்து கொள்வார்.
பிரித்தானிய மகாராணியுடன் தொடர்புடைய இந்த ஒரு நிகழ்விலேயே மகிந்த ராஜபக்ச பங்கேற்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்த இதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கொமன்வெலத் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவே ஜனாதிபதி மகிந்தவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு அவர் யுஎல்-505 விமானம் மூலம் ஹீத்ரோ விமான நிலையத்தின் 4வது முனையம் ஊடாக லண்டனுக்குள் நுழையவுள்ளார்.
இவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி கோரப்பட்டதை அடுத்து வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் அவருடன் லண்டன் வருவோரும் எங்கு தங்கவுள்ளனர் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
டோசெஸ்டர் விடுதியே அவர்களின் முதன்மையான தெரிவாக உள்ளது. காரணம் அது அது லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு மிகஅருகே உள்ளது தான்.


Posted in