முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு மே18ம் நாளில், சிறிலங்கா புலனாய்வாளர்களினால் யாழ்பாணத்தில் தாக்குதலுக்கு உள்ளான, யாழ் பல்கலைக்கழக மாணவர் பீடத்தலைவர்
கே.தர்சானாந்துக்கு, தனது தோழமை ஆதரவினை Fédération Syndicale Etudiante (FSE பிரென்சு மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்சியான நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வியினைத் தொடரும், தமிழ் மாணவ சமூகத்திற்கு தனது முழுமையான தோழமையினை வழங்குவதாகவும் Fédération Syndicale Etudiante (FSE மாணவர் அமைப்பு, பிரென்சு ஊடங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது நடந்தேறிய இனப்படுகொலையினை கண்டும், மௌனம் காத்திருந்த சர்வதேச சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு நிபந்தனையற்ற முழுமையான ஆதரவினை தாங்கள் வழங்குவதாக Fédération Syndicale Etudiante (FSE மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
- தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கின்றோம்
- தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதனை அங்கீரிக்கின்றோம்.
- தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுகிறோம்
- போர் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியினை வேண்டுகிறோம்
என Fédération Syndicale Etudiante (FSE பிரென்சு மாணவர் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வலுவான உயர்கல்வி மாணவ சமூகத்தின் அமைப்பாக Fédération Syndicale Etudiante (FSE உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது
http://mcetv.fr/news-express/


Posted in