மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகுவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.
ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது பாதுகாபப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.
இந்த ஒன்றுகூடலுக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழத் தாயக உறவுகளுக்கு, சிற்றலையூடான வானோசை ஒலிபரப்பின் ஊடாக செய்தியொன்றினைத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவிலும், தமிழர் தாயகத்திலும், இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் ,உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் ,அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு ,உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும், தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
போர் இடம்பெற்ற காலங்களிலும், தொடர்ந்து மனித நேய நெருக்கடி மிகுந்த கட்டங்களிலும் , மிகுந்த துணிச்சலுடன் கிறிஸ்தவ மத விழுமியங்களுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள்.
சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக, அப்பாவித் தமிழ் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதிவேண் சாட்சியம் அளித்தவர்.
அந்த ஒரே காரணத்தினை முன்வைத்து ,அவரின் தனித்துவத்தினையும் ,நன்மதிப்பினையும் புறந்தள்ளி ,சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துவதிலும், பாராளுமன்றத்தில்பொறுப்பற்று விமர்சிப்பதும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளாகும்.
இத்தகைய செயல்கள் யாவற்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
சிறிலங்காவிலும், தமிழர் தாயகத்திலும், இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் ,உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் ,அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு ,உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும், தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தாயக மக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம், புலத்தில் வாழும் எமக்கு புது உத்வேகத்தினைத் தருகின்றது.
தமிழர் தாயகத்தினுள்ளும் ,சிறிலங்காவிலும் இந்து ,இஸ்லாமிய மத சுதந்திரத்துக்கும், வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதிகளின் செயல்களுக்கு எதிராக , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எமது புதிய போர்களம் ,தமிழர் வாழும் தேசங்கள் என்ற அடிப்படையில் , உலகலாவிய ரீதியில் விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரமாரன் அவர்கள் தமிழீழத் தாயக மக்களுக்கு தெரிவித்த கருத்தினை முழுமையாக கேட்க : http://soundcloud.com/tgte/


Posted in