முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நவலோக்க தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்களினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசேட நிபுணத்துவ வைத்தியர் சரத் பொன்சேகாவை சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பும் வரையில் நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்க முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் பிணை தொடர்பான மனு எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.


Posted in