தமிழர் தாயகப் பகுதிகளான வடக்குக் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமான குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்த போதே இவ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடகிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், குறித்து தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டதுடன்
அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது நிலைப்பாட்டை தமிழர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கள் இந்தநாட்டில் இனப்பிரச்சினைக்கு தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதற்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமையுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Posted in