நீதிமன்ற கட்டளையை கிழிந்தெறிந்த விவகாரம்; சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பதிய உத்தரவு

sivajilingam(3)

யாழ். பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றின் கட்டளையை கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதுடன் வழக்கினை ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை, யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமாகிய சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். அத்துடன் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்த யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மன்றில் ஆஜராகியிருந்தார்.

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் சார்பாக மன்றில் ஆஜராகவில்லை, இதனால் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெறவில்லை என யாழ் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்ததை தொடர்ந்து, அவரிடம் வாக்குமூலத்தினை பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress