யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே நாள் பேரணியில் சிங்கக்கொடி ஏந்தியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில், சிறிலங்கா அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இது ஒரு சாதகமான முன்னேற்றம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சபை முதல்வரும், சிறிலங்கா அமைச்சருமான நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
“நாம் விரும்புகின்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு இது நல்லதொரு அறிகுறி.
இந்த முன்னேற்றம் குறித்து தனிப்பட்ட ரீதியாக ஏனையவர்களை விட நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் ஒரு வெற்றிகரமான மே நாள் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளீர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமது பங்களிப்பை உறுதி செய்தால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Posted in