வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது; ஜகத் ஜயசூரிய திட்டவட்டம்

250e99a111854c8543b137adc15c5ec3

வட பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதில்லை என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கிலே படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுளதாகவும், சமாதானம் மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் படையினரின் கடமைகள் இராணுவ முகாம்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும்.

இப்பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் கோரினால் மட்டும் பாதுகாப்பு படையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

வட பகுதியில் ஏதேனும் ஓர் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டுமாயின் அதனை தீர்மானிக்கப் போவது தாமே என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress