வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் நாட்டின் எந்த மாகாணங்களையும் ஒன்றிணைக்க முடியும். இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
வடக்கு பிரச்சினைக்கு ஈழ இராச்சிய தீர்வுத் திட்டம் பொருந்தாது என்பது கட்சியின் நிலைப்பாடாகும். ஈழ இராச்சியமோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கைக்காவோ கூட்டமைப்பு குரல் கொடுக்காது.
வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதன் மூலம் ஈழ இராச்சியத்தை உருவாக்க முயற்சிப்பதாக எவரேனும் குற்றம் சுமத்தினால் அது நாட்டையும் மக்களையும் பிழையாக வழிநடத்தும் நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Posted in