வடக்கில் இராணுவ ஆட்சியா? அடியோடு மறுக்கிறார்; விமல் வீரவன்ச

5edd8dae41fa73f1123d80858871f4d6-1

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை துன்புறுத்த வேண்டிய தேவை படையினருக்கு கிடையாது. படையினருக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே குற்றம் சுமத்தி வந்தது. தற்போது கூட்டமைப்புடன் வேறு சில தரப்பினரும் இணைந்து கொண்டு குற்றம் சுமத்துகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் தேவைக்கு அமைய இவ்வாறான சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சனல் 4 காணொளி எதற்காக குற்றம் சுமத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்றால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress