இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படையினரை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா அறிக்கை

dd92ccbe5887888b94d9367f62e99f90

இலங்கை விமானப் படையினருக்கு, இந்திய விமானப் படைத்தளமொன்றில் பயிற்சியளிக்கப்படுவதற்கு  தழிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சித் திட்டத்தை நிறுத்தம் செய்து இலங்கை விமானப் படையினரை நாட்டிற்கு திருப்பியனுப்புமாறு இன்றைய தினம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை விமானப் படையினருக்கு சென்னைக்கு அண்மையிலுள்ள தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இது தமிழர்களுக்கு எதிரானதொன்றுக்கு  துணைபோகும் விடையமாகும்.
இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக தடைகள் கொண்டு வரப்படவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள இவ்வேளையில்,
இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்படுவது தவறான விடையமென்றும் அது மாத்திரமின்றி தமிழ் மக்களின் நலனுக்குப் பாதகமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி,9 பேருக்கு வழங்கப்படும் 9 மாத பயிற்சி இரத்துச் செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட வேண்டுமெனவும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டுமெனவும் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையிட்டு மத்திய அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதையும் அவர் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress