இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் அரசியல் தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தந்தை செல்வநாயகம் மகன் சந்திரஹாசன் தமிழீழ அகதிகள் தாயகம் திரும்ப அரசியல் தீர்வுதான் வழி என்று கூறியிருக்கிறார். இது உண்மைதான். இதற்கு தேவையான உதவிகளையும், முயற்சிகளையும் செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் ஆகும்.
“டெசோ´ சார்பில் நடத்தப்பட உள்ள மாநாட்டில் இது பற்றியும் நிச்சயம் விவாதிப்போம் எனக்கூறியுள்ளார்.


Posted in