வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தமிழினி

thamilani_002

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு தங்களின் பயிற்சிகளை நிறைவுசெய்த 16 பேர் எதிர்வரும் 4ஆம் திகதி சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress