இலங்கையில் பல தசாப்தங்களாகவே தமிழினத்தைச் சிறுபான்மையினர் எனக் கூறிக் கொண்டு அடிப்படை உரிமைகளை வழங்காது காலத்திற்கு காலம் இடையிடையே இனக்கலவரங்களை மூட்டி விட்டுத் தமிழர்களை வெட்டியும், சுட்டும, எரித்தும், அடக்கி ஒடுக்கி வந்த சிங்களப் பேரினவாத அரசுகளின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத தமிழ் இளைஞர்கள் அணிதிரண்டு போராடிய போது இனவிடுதலைக்கான உரிமைப்போரை பயங்கரவாதம் எனப் பெயர் சூட்டி அந்நிய சக்திகளின் துணைபெற்றுப் புலிகளை ஒழிக்கிறோம். பயங்கரவாத்தை ஒழிக்கிறோம்.
அதற்கான மனிதநேய நடவடிக்கையே எனக் கூறிக்கொண்டு கச்சிதமாகத் தனது இனஅழிப்பினைப் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை சிறுவர்இ பெண்கள்இ ஆடவர்இ முதியோர் என எதுவித பேதமுமின்றித் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்ததுடன் நின்றுவிடாது புலிகளின் ஆதரவாளர்கள்இ உதவி செய்தவர்களஇ; பணியாளர்கள் எனக் கூறிக்கொண்டு கடந்த மூன்றாண்டுகளில் காணாமற் போனோர், கடத்திச் செல்லப்பட்டோர்இ இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமாமற்போனோர் என ஒரு தொகையிலான தமிழர்களையும் இல்லாதொழித்துவிட்டது மகிந்த அரசு.
அடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம் எனக் கூறிக்கொண்டு அதற்கு நேர்விரோதமாகத் தமிழினத்தை அடியோடு இல்லாதொழிக்கும் வகையில் தீவிரமான தந்திரோபாய மூலோபாயங்களை வௌ;வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் தனது இராணுவத்தினரூடாகவும் அடிவருடிகளான அரச அதிகாரிகளினூடாகவும் முடுக்கிவிட்டுள்ளது மகிந்த அரசு.
அவ்விதமாக மூலோபாயங்களில் ஒன்றாகவே மகிந்தராஜபக்சவின் அருமைச் சகோதரரும் பொறுப்பு வாய்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கை அமைந்துள்ளது. அவரது வாயிலிருந்து கக்கிய விஷவார்த்தைகளே அவரது அடிமனதின் உள்ளக் கிடக்கைகளைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டன.
கோத்தபாய பி.பி.சிக்கு அளித்த பேட்டியொன்றின் போது ‘பிரிவினைவாதப் போர் நடைபெற்ற இலங்கையின் வடக்குப் பகுதியை பெருமளவில் தமிழர்கள் வாழும் பிரதேசமாகக் கருதமுடியாது’ என்று கூறியுள்ளார். இவர் இப்படிக் கூறியது தான் தாமதம் அதனைத் தொடர்ந்து சந்தர்ப்பம் எப்போது வரும் எனக் காத்திருந்த பல பேரினவாத சந்தர்ப்பவாதிகள் தத்தமது உள்ளக்கிடக்கைகளைத் தினமும் பகிரங்கமாக அள்ளி வீசத் தொடங்கிவிட்டனர்.
புரையோடிப்போயுள்ள தேசிய இ;னப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தற்போது பலதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அரச அதிகாரியான அதுவும் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளதானது தீர்வுத்திட்ட முயற்சிகளுக்குத் தடையாகவே அமையும்.
இவரது பேட்டி வெளிவந்ததைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் ‘இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களான தமிழர்கள் வந்தேறி குடிகள். இவர்கள் எவ்வாறு வடபகுதியைத் தமது தாயகம் என்று உரிமை கோர முடியும்? வடக்குக் கிழக்குத் தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு எந்தச் சான்றோ அல்லது ஆதாரமோ கிடையாது’ எனக் கூறியுள்ளார்.
அதற்குச் சவால் விடுக்கும் விதத்தில் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அது தவறெனச் சுட்டிக் காட்டித் தன்னுடன் தேரரைப் பகிரங்கமாக வாதிடுவதற்கு வருமாறு அழைப்பினை விடுத்திருந்தார். ஆனால் தேரர் அதற்கு பதிலேதும் வெளிவிடாது ஒதுங்கிவிட்டார்.
இவை ஒருபுறமிருக்கஇ வடக்கின் வசந்தமெனக் கூறிக்கொண்டு புயல் வீசச் செய்யும் தீவிர முனைப்பான நடவடிக்கையில் மகிந்த அரசு ஈடுபட்டு வருகிறது.
இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடுங்குளிரிலும் கிடந்து அவதிப்படும் நிலையில் அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கையினை எடுக்காத அரசு தமிழர் தாயகத்தில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு வீடுகளை அமைத்து சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி ஓர் இனத்தின் பரம்பலை மாற்றியமைக்கும் கைங்கரிய வேலையில் முனைந்துள்ளது.
‘வடக்கின் வசந்தம்’ என்பது சிங்களக் குடியேற்றங்களா? எனத் திகைக்க வைக்கும் விதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள திருமுறிகண்டிப் பகுதியில் 4000 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றமொன்றைத் தமிழர் தாயகத்தில் அரங்கேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மும்மரமாக முன்னெடுத்து வருகின்றது. ‘போர் வீட்டுத்திட்டம்’ என்ற பெயரில் போரினால் பாதிப்புற்ற இராணுவத்தினரின் குடும்பங்கள் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினரின் குடும்பங்களை உள்ளடக்கிய ‘ஓர் பாரிய அளவிலான சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கு வீடுகளும்இ வீதிகளும்இ மன்சாரக் கட்டமைப்புகளும் மிகத் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
வடக்கில் வசந்தமும் வீசவில்லைஇ கிழக்கில் உதயமுமில்லை. மாறாக இந்த அரசு தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி வருகின்றது. இதற்குக் கட்டியங் கூறுவது போன்றமைந்ததே கோத்தபாயவின் கூற்றாகும்.
இதேவிதமாக மன்னார் மாவட்டத்தின் முசலி நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுகளிலும் செட்டிக்குளம் பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்களுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றவண்ணமுள்ளன.
மறுபுறத்தில் இராணுவத்தினரின் தேவைக்கென பலநூற்றாண்டுக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்து வருகின்றனர். இதில் பொதுக்காணிகள்இ தனிப்பட்டவர்களின் காணிகள் என்பனவும் உள்ளடங்குகின்றன.
‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போன்று ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தையே காணிஇ நிலம் இ வீடு வாசல் அற்றவர்களாக ஏதிலிகளாக ஆக்குவதில் மிகு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது மகிந்த அரசு.
வடக்கிலும் கிழக்கிலும் சந்திக்குச் சந்தி ஊருக்கு ஊர் எனப் புத்தர் சிலைகளை நிறுவுவதன் மூலம் தமிழர் பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலையும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சிங்களமயமாக்கலையும் ஏககாலத்தில் தன் அதிகாரத்தின் மூலம் திறம்படவே செயற்படுத்தி வருகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
யாருமே எதிர்க்கருத்துக் கூற முடியாத அளவுக்குத் தமிழர் தாயகம் முழுவதும் இன்று தமிழரின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய இத்தருணத்தில் தமிழர்களின் நிலங்களை ஏப்பமிடும் முயற்சியில் இராணுவமும் அரசின் ஒத்தாசையுடன் வரிந்து கட்டிச் செயற்படுகின்றது.
ராஜபக்சவின் குடும்பத்தில் ஆதிக்கம் இன்று இலங்கையை கிட்லரின் ஆட்சியை விஞ்சும் வகையில் சகலரையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.
இது குறித்து சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனைத்தினதும் குற்றச்சாட்டுகள் எதனையும் மகிந்த அரசு சற்றும் பொருட்படுத்துவதேயில்லை. மாறாக எவரும் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது. எவருக்கும் எமது இணையாண்மையில் உள்நுழைய அனுமதி இல்லை என்று மமதையுடன் மார்தட்டி அறிக்கைகளை மகிந்தவும் அவரது சக அமைச்சர்களும் மாறி மாறி விடுத்து வருகின்றனர்.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவி ஒரு தமிழின அழிப்பையே படிப்படியாக அரங்கேற்றி வருகிறார் மகிந்த ராஜபக்ச. மேலும்இ தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகளை அழித்து எஞ்சியுள்ள தமிழர்களின் தனித்துவத்தையும் சிதைக்கும் கீழ்த்தரமான செயலில் இறங்கியுள்ளது மகிந்த அரசு.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மகிந்த அரசு அதற்கும் கட்டுப்படமாட்டோம் என அறிவித்தது.
இக்கொடுமைகளுக்கெல்லாம் ஓர் விடிவுகாலம் வராதா என ஏங்கியவண்ணம் காத்திருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு சர்வதேசமும் மனித நேய அமைப்புகளும் கூறப்போகும் பதில்தான் என்ன?
-சர்மா


Posted in