sankathi

குடாநாட்டிலும் படையினரால் வாக்காளர் விவரம் திரட்டு
கிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்களால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்திலும் இராணுவத்தினரால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவுக்காக கிராம சேவையாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பெயர்ப்ப பட்டியலை இராணுவத்தினர் தமக்குத் தருமாறு கேட்டு அதனை போட்டோ பிரதி செய்துவிட்டு மூலப் பிரதியை மீண்டும் கிராம சேவையாளர்களிடம் வழங்குகின்றனர்.

அத்துடன் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களில், தற்போது வெளிநாடு சென்றவர்கள், இறந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பான விவரங்களும் இராணுவத்தினரால் திரட்டப்பட்டுள்ளன.

சில இடங்களில் பிரதேச செயலகங்களுக்குச் சென்ற இராணுவத்தினர், வாக்காளர் பெயர்ப் பட்டியலை கோரியுள்ளனர். இது தொடர்பாக வடமாகாண தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் இறக்குமதி குறித்த சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது
ஈரானிடமிருந்து எரி பொருள் இறக்குமதி செய்வது குறித்த சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இவ்வாறு சந்தர்ப்பம் அளித்துள்ளது. மேலும் ஆறு மாத காலத்திற்கு ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில உதவிகளை வழங்கி வருகின்றது. ஈரானிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

எனினும் இந்தியா இலங்கை சீனா உள்ளி;ட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான ஒர் பின்னணியில் ஏற்கனவே ஈரானிடமிருந்து பெருமளவு எரிபொருள் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அமெரிக்கா, கால அவகாசம் வழங்கியுள்ளது.

வேறும் நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் வரையில் ஈரானிடமிருந்து பொருட்களை கொள்வனவு தற்காலிக அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.

ஈரானிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவிடமிருந்து நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சில காலம் வரையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஈரானிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்ய தற்காலிக அடிப்படையில் அனுமதியளித்துள்ளது.

கனடாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!!
தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் முரசறைவு அமைந்திருந்த சமவேளை கனடா, பிரித்தானியா, பிரான்சு என பல்வேறு இடங்களில் ஒன்றுகூடிய தமிழீழ உணர்வாளர்கள் முரசறைவின் போது உணர்வெழுச்சியோடு கூட்டிணைந்து நின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (தமிழகம்)பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி அவர்கள் முரசறைவின் முன்னுரை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வரலாற்று ஆவணமாகிய தமிழீழ சுதந்திர சாசனத்தினை வாசித்து முரசறைந்தார்.

முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனமானது நிகழ்வுபூர்வமான தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகள் முதலில் விபரித்திருந்தோடு வெளியுறவு , பொருண்மியம் , மொழி , கல்வி , மருத்துவம் – உடல்நலன்சார் , மேம்பாடு , சுற்றுபுறச்சூழல் , குடியுரிமை ஆகியனவற்றின் தமிழீழ தேசத்தின் கொள்கை நிலைப்பாட்டினை உள்ளடக்கியிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக அமைந்திருந்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வில் தென்சூடானிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி Daniel Mayan, வங்கதேச விடுதலை இயக்க பிரதிநிதி Dr.Nabibulla , அமெரிக்காவின் முன்னாள் சட்டாஅதிபர் (நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்) Ramsay Clarke, பேராசிரியர் Francis Boyle நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தயாபரன்ஆகியோர் உரைகளை வழங்கியிருந்தனர்.

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு கடந்த 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த முரசறைவு மாநாட்டில் தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத பல்வேறு துறைசார் ஆளுமையாளர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. பல்வேறு தலைப்புக்களில் விவாதங்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன.

முரசறையப்பட்டுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெரிவித்திக்கையில் :

இத் தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகiளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம். உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது. இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணைசெய்யும். அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என்பது நமது நம்பிக்கை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

video links :

வணக்க நிகழ்வு : http://youtu.be/4MX9e8j3aU4

பிரதிநிதிகளின் கருத்துரைகள் :

பேராசிரியர் மணிவண்ணன் : http://youtu.be/P-8fr-e-Rj0

பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா : http://youtu.be/9VCboKuLa-w

கலாநிதி ஜெயராஜ் ( USTIPAC அமைப்பு அமெரிக்கா) : http://youtu.be/uB4DEbrSiNE

நாஞ்சில் பீற்றர் ( FETNA அமைப்பு – அமெரிக்கா) : http://youtu.be/PmgVvrtdR0k

பேராசியர் சந்திரகாந்தன் : http://youtu.be/-iSVdkDJ4-U

கலாநிதி இம்தியாஸ் ( முஸ்லிம் பிரதிநிதி) : http://youtu.be/CoDAbUQ3Bts

திரு-திருமதி சிறிதாஸ்( தேர்தல் ஆணையம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) : http://youtu.be/8AcUdBTpS4k

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் – மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் “கடற்காற்று” எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “வன்னிவிக்கிரம” நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான “ஆகாய- கடல்வெளி”ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட “யாழ்தேவி” நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட “முன்னேறிப்பாய்தல்” முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த “சூரியக்கதிர்” நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து “ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட “தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன்
மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை , அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது.

கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

ஆனாலும் கலாசார இன அழிப்பின் பல பரிமாணங்கள் , வட- கிழக்கு எங்கணும் 2009 இற்குப் பின்னர் தீவிரமடைவதையிட்டு மனித உரிமை குறித்து ஐ.நா வில் தீர்மானங்கள் கொண்டுவரும் மேற்குலகிற்குப் புரிவதில்லை.

கால அவகாசம் வழங்குவதால் தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோவது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.

இந்த வாரம் வடக்கிற்கு வசந்தப் பயணம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதிகாரிகள் ,யாழ் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ,கிளிநொச்சியில் சிறிதரனையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர் நிலமும், மண்டைதீவில் 600 ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உத்திர வேங்கை ஆலயக் காணியும் படையினரால் சுவீகரிக்கப்பட்ட விடயம் அமெரிக்க அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. இவைதவிர இரணைதீவு, பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் படையினருக்கு ஒதுக்கப்பட்ட விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

சாந்தபுரத்திலிருந்து தெல்லிப்பளை வரை ,’ எமது நிலம் எமக்கு வேண்டும் ‘ என்கிற முழக்கத்தோடு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் இராணுவ பிரதேசமாக மாற்றமடைவதற்கு எதிராக, கடந்த பெப்ரவரியில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடாத்திய வேளை, மக்கள் விரோதக் கும்பலொன்று தாக்குதலில் ஈடுபட்டது. அதில் பொதுமக்களோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி , இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொண்டது.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை பொதுசனமும் கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும்போது ,படைப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களைப்புகைப்படம் எடுப்பது, ஒன்றுகூடும் இடத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது, ஆர்ர்ப்பாட்டம் முடிந்து வாகனங்களில் செல்வோர் மீது தாக்குதல் தொடுப்பது போன்ற பல ஒடுக்குமுறை வடிவங்கள் மக்களை நோக்கி பிரயோகிக்கப்படுகிறது.

இருப்பினும் நிலமிழந்த மக்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்வதற்காகப் போராடும் முயற்சியினைக் கைவிடவில்லை. அவர்களை ஒன்றிணைத்து வெகுஜனப்போராடங்களை முன்னெடுக்கும் வகையில் பலமான அரசியல் தளம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவையாக அமைகிறது.

மக்களிடையே சாதிய ,மத ரீதியான உள் முரண்பாடுகள் இருந்தாலும் , பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அணி திரளவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே எவ்வாறு பகைமையுள்ள முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது குறித்து ‘ தராக்கி’ சிவராம் அவர்கள் முன்வைத்த ஆய்வுகளை, வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

‘உயர் பாதுகாப்பு வலயம்’ சட்டபூர்வமானதாக மாற்றப்படுகிறது என்பதுதான் இப்போதுள்ள தலையாய பிரச்சினை.

காணி சுவீகரிப்பு சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ், வலிகாமம் வடக்கு ( தெல்லிப்பழை), வலி.கிழக்கு ( கோப்பாய்) என்கிற இரு பிரதேசப்பிரிவிலுள்ள , மொத்தமாக 11 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது மக்களின் 6381 ஏக்கர் 38.91 பேர்ச் காணி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.

காணிக்கு உரிமை கோருவோரை அடையாளம் காண இயலாமல் இருப்பதால், இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியை யும் ( காங்கேசன் துறையும், பலாலியும்) ,யாழ்.பாதுகாப்பு பட்டாலியன் தலைமையகத்தையும் உத்தியோகபூர்மாகக் கையளிப்பதாகக் கூறும் அறிவித்தல் ஒன்றினை ,யாழ் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த காணி சுவீகரிப்பு அதிகாரி எ. சிவசுவாமி விடுத்துள்ளார்.

தமது வாழ்விடங்களில் இருந்து 23 வருடங்களுக்கு முன்பாக ,வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்தான் இந்த இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள். பயிர் செய்கைக்கு உகந்த அற்புதமான செம்பாட்டு மண் இங்கு பரவிக் கிடக்கிறது. தாம் வாழ்ந்த மண்ணைக்கூட இம்மக்களால் தரிசிக்க முடியவில்லை.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சனநாயக நாடுகளுக்கு , முகவரியிழந்த மக்களின் குரல் கேட்காதா?. மீள்குடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறுகிறதென இன்னமும் பொய்யுரைக்கப் போகிறார்களா?. தீர்மானத்தால் விடியலின் வாசல்கள் திறக்கப்படுமென்று ,மர நிழல்களில் வாழும் துன்ப்பப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களா ?. காணாமல் போகடிக்கப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மார்களை,சகோதர சகோதரிகளை தேடியலையும் உறவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது இந்த சர்வதேசம்!

முடிவின்றித் தொடரும் துயரங்களுக்கு மத்தியில், குடியிருந்த நிலமாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், சிறுதுளி நம்பிக்கையோடு வாழும் தமிழ் மக்களுக்கு ,அடுத்தடுத்துவரும் காணி அபகரிப்பு சுவரொட்டிகள் அச்சத்தை ஊட்டுகின்றன.

ஒருவருக்கு 5 படையினர் என்கிற வகையில் ஏறத்தாள 31,000 இராணுவத்தினர் பூநகரியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதில் பூநகரியைச் சூழவுள்ள பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், மற்றும் முழங்காவில் உட்பட 800 ஏக்கரில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

சுவீகரிக்கப்பட்ட நிலத்தில், சீன தேசத்தின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை நிர்மாணிக்கும் திட்டம் அரசிற்கு இருக்கிறது.

காற்றாலை உடன் , சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையங்களை , மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் நிறுவிட, சீனத் தொடர்புடைய மலேசிய கார்பரேட் ஒன்றிக்கு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாதகல்லில் இருந்து வெளியேறிய 279 குடும்பங்களின் நிலை குறித்து மனித உரிமைவாதிகள் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை.

‘கண்ணி வெடி அபாயம்’ என்கிற பதாகைகள் , திருவடிநிலை மக்களை குடியேற விடாமல் தடுக்கிறது. ஆனால் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இவைதவிர, உயர் பாதுகாப்பு வலயம் என்று குறிப்பிடப்பட்ட மயிலிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளில் ,இரண்டு விடுமுறை விடுதிகள் (Holiday Resort) படையினரின் பயன்பாட்டிற்காக சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு குடாநாட்டைத் துண்டாடும் வகையில், நீண்ட அணைகள் (BUND) வலி வடக்கில் கட்டப்படும் விசித்திரங்களையும் காணலாம்.

தொண்டமாணாறு செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அணை , ஓட்டகப்புலத்தை ஊடறுத்து பலாலி படைத்தளத்தை அண்டிய வசாவிளான் வரை நீண்டு செல்கிறது. குரும்பசிட்டியில் ஆரம்பித்து கட்டுவன் மற்றும் தெல்லிப்பளையை கடந்து செல்லும் மற்றுமொரு அணை காங்கேசன்துறையில் சங்கமிப்பதாக வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார். இந்த அணை கட்டும் வேலைத்திட்டத்தின் ஊடாக 26 கிராம சேவைகள் பிரிவிற்கு உட்பட்ட நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் நில அபகரிப்பிற்கு எதிரான கனதியான போராட்டங்கள் ,தேர்தல் அரசியலைக் குறிவைக்காமல் ,குடாநாட்டில் முன்னெடுக்கப்படும் நிலை தோன்றுவதைக் காணலாம்.

தினசரி கூலியை 550 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்கிற போராட்டங்களும் மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு மனோ கணேசன் தாக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் வரவழைப்பதற்கு, தொம்சன் மதியுரைக் குழு என்கிற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ள அரசு, மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கிறதென நாட்டிற்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பொய்யான நம்பிக்கைகளைக் கொடுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால், மின்சாரக் கட்டண உயர்விற்கான காரணத்தை ஏன் கூறமுடியாமல் தவிக்கிறார் என்று ஐ.தே. கட்சியின் எம்பியும் பொருளியல் நிபுணருமாகிய கலாநிதி.ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.

ஆட்சி அதிகார மையத்தில் பொருளாதாரச் சுனாமி அலை மேலெழும் அதேவேளை, வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசு முன் வருகிறது. செப்டெம்பர் தேர்தலுக்கு முன்பாக காணிச் சுவீகரிப்புகள் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.

ஜனநாயக விரோத அரசுக்கெதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையால் அரச திணைக்களங்களிலும் பொதுத் துறைகளிலும் ஊழல் நிறைந்த ஊதாரித்தனமான செயல்களினால் வரிச்சுமை அதிகரித்து, உற்பத்தி குன்றி, கடன்கள் அதிகரித்து மக்கள் வதைக்கப்படுவதற்கு எதிராக போராடவேண்டியுள்ளோம்.

எனவே மனித உரிமைகளுக்கெதிராக ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்ச்சி தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகத் தொழிலாளர் விடுதலை பெற்ற நாளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் “மே” முதலாம் ஆம் நாள் தொழிலாளர் விழாவாகக் கொண்டாடுவது வழமையானதே.

பல நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், புரட்சி நடவடிக்கைகள் காரணமாக ஆட்சிகளே மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் வரலாறுகளாகும்.

இலங்கையிலும் தொழிலாளர் வர்த்தக்கத்தின் போராட்டங்களை பெரும்பாலும் இடதுசாரி அரசியல் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் நடத்தி வந்துள்ளன.

அந்நாளில் ஒரு சதத்தால் பாண் விலை அதிகரித்தாலும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இப்பொழுது இன்றைய அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர்களாகி விட்டனர்.

பாணின் விலை ஒரு௦௦ ரூபா அதிகரித்தாலும், விலைவாசி மலையென உயர்ந்தாலும் அன்றைய போராட்டங்கள் இன்று ஏற்படுவதாயில்லை. அவை நியாயப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் நீண்டகால யுத்தம் மற்றும் போராட்டங்கள் காரணமாக மக்கள் அரசியல் உரிமைகள் அற்றவர்களாக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் மிகமோசமாக வீழ்ந்து கிடக்கிறார்கள்.

அவர்களில் பல இலட்சம் மக்கள் நிலமற்ற, வீடற்ற, வேலையற்ற, உழைப்பற்ற ஏதிலிகளாகப் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

விவசாய நிலங்கள், மீன் பிடிக்கக்கூடிய வளமுள்ள கடல் பகுதிகள், குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து சொந்தக்காரர்கள் அகற்றப்பட்டு சீரழிக்கப்படுகிறது.

குறிப்பாக வலி.வடக்கிலிருந்து 23 ஆண்டுகளாகியும் அந்த மக்கள் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான காணிகளும் பல ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதற்கு என அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பௌத்த குடிமக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும் கட்டப்படுகின்றன.

தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழ்த் தேசிய இனம் ஒன்றில்லை என்னும் நிகழ்ச்சி நிரல் அரசினால் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ்த் தேசிய இனக் கட்டமைப்பையும் ஒரு தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் அழித்துவிட்டு இனப்பிரச்சினையே இல்லை என்று சொல்லவே அரசு திட்டமிடப்பட்டு செயலாற்றுகின்றது.

அதற்காக தமிழ் விவசாயிகளை அவர் நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள விவசாயிகளின் குடியேற்றமும் தமிழ் மீனவர்களைக் கடல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள மீனவர்களின் குடியேற்றமும் நடக்கின்றது.

தமிழர் பிரதேசங்களை இராணுவ மயமாக்கி, சிங்கள மயமாக்கி, பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலே அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தனை செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களுக்கும் பொருத்தமானதே.

பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிகளையும் அனுப்பப் போவதில்லை
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது. எனினும், மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முழு அளவிலான பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைக்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனடா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய வெளிவிவகார திணைக்களத்தின் எமா வெல்போர்ட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலையில் முழு அளவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் பங்கேற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பாரிய யுத்தக் குற்றச் செயல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம் ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு
முல்லைத்தீவு  கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

சொந்த ஊரில் அகதி ஏற்கனவே கோம்பாவில் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடத்தி லேயே அகதி முகாம் அமைத்து குடியமர்த் தப்பட்டுள்ளன. இதில் 136 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளன.

இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை படையினரி டம் இருந்து விடுவித்து அங்கு தம்மை மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை, சமுர்த்தி நிவாரணம் இல்லை, தொண்டு நிறுவனங்களது உதவிகளோ, தற்காலிக வீடுகளோ இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறோம் என்கின்றனர் அந்த மக்கள்.

இந்த குடிசைகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவிக்கையில்; “”போரால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களே இங்கு இருக்கின்றனர். பெண் தலைமை குடும்பங்கள், ஊனமுற்ற குடும்பங்கள், முன்னாள் போராளிளாக இருந்த குடும்பங்கள் என்று வாழ்வாதார நிலையில் பெரும் நெருக்கடிகளே அதிகம்.

குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. இதற்காக நாங்கள் தினமும் 300 மீற்றர் வரை அலைய வேண்டும். மருத்துவ, கல்வி சேவைகளுக்கு அதைவிட நெருக்கடி நிலையே எதிர்கொண்டுள்ளோம். முன்பள்ளி பருவத்தில் 15 வரையான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்று வரை மர நிழலிலேயே கற்று வருகின்றனர்.

மலசலம் கழிப்பதற்கு கூட இரவு வரும்வரை காத்திருக்கிறோம் என்கிறார் அந்தப்பெண். இதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; “”நான் ஒரு அங்கத்தவர். எனக்கு அரச, அரச சார்பற்ற எந்த உதவிகளும் இல்லை.

காரணம் ஒரு அங்கத்தவர் என்பதே எனக்கு எந்த அரச உதவிகளையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உயர்பாதுகாப்பு வலயத்தில் எனக்கு 5 ஏக்கர் காணியுள்ளது. அதை என்னிடம் ஒப்படைத்தாலே போதும்” என்றார்.

சொந்த இடத்தில் நாங்கள் அகதிகளாக இருக்கிறோம். எங்களை ஏன் என்றும் கேளாது அரசு தனது பாட்டுக்கு காணிகளை அபகரிக்கிறது. ஏன் இந்த அநியாயம் என்று கேள்வி எழுப்புகிறார் அந்தப்பகுதியில் முடியாதிருக்கும் வயதான பெண் ஒருவர்.

தனக்கு துணைக்கு யாரும் இல்லை என்று குறிப்பிடும் அந்த மூதாட்டி படுத்துறங்குவதற்கு ஒரு குடிசையை அமைப்பதற்கு கூட எனக்கு உதவ யாரும் வரவில்லை என்று கவலை கொள்கிறார்.

எது எப்படியோ காணி எடுத்தல் அலுவலகம் சார்பாக முல்லைத்தீவு கேப்பாபுலவில் 526 ஏக்கர் காணி பறிக்கப்படுகிறது. இவற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழம்வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்: மகிந்த ராஜபக்சவின் அச்சமும் தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கமும் !
ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்.தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சமீபத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உதிர்த்த இந்த வார்தைகள் செய்தியூடகங்களில் பத்தோடு பதினொன்றாக கடந்தவிட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச கூறிய கூற்றின் உள்ளுள்ள சிங்களப் பேரினவாத்தின் அச்சம் குறித்து தமிழர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக உருவாகி வருகின்ற தமிழீழ சாசனத்திற்கான முன்னெடுப்புக்கள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை சிங்கள பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவத்தின் குரலாக மகிந்த ராஜபக்சவின் கூற்று வெளிவந்துள்ளது.

ஈழம்வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர் என மகிந்த ராஜபக்ச உடைத்து கூறியிருப்பதன் ஊடாக உருவாகிவரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தான சிங்கள தேசத்தின் அச்சம் மீண்டுமொரு தடவை வெளிப்பட்டுள்ளது.

தமிழீழ சுதந்திர சாசனத்தினை உலகப் பரப்பெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புக்களின் கூட்டொத்துழைப்புடன் உருவாக்கி வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது சிங்களப் பேரினவாதம் ஏற்கனவே பலதடவை தனது அச்சத்தினையும் சீற்றத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.

2012ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த காலப்பகுதியில் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் வெளிவிகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் இருக்கின்ற வி.உருத்திரகுமாரனினால் வழிநடத்தப்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமெரிக்கா தடை செய்யவேண்டும் என்று அன்றைய அமெரிக்க இராஜாங்கச் வெளிவிவகாரச் செயலர் கில்லரி கிளின்டன் அம்மையாரிடம் முன்வைத்திருந்த கோரிக்கை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

இதேபோன்று சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட அமெரிக்கத் தூதுவரிடமும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச இதே கோரிக்கையினை முன்வைத்திருந்ததாக விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளிக் கொணர்ந்திருந்தது.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் உயிர்களை மட்டுமல்ல அவர்களது பெருவிருப்பான தமிழீழ்தினையும் குழியில்புதைத்துவிட்டதாக சிங்களம் யுத்த வெற்றிமிதப்பில் இருந்த வேளை தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்ற தமிழர்களின் பெருவிருப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வடிவமாக வெளிக்கிளம்பியது சிங்கள தேசத்திற்கு அச்சத்தினையும் சீற்றத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை வெறும் பயங்கரவாதப் போராட்டமாக உலகின் சித்தரித்து அனைத்துல அரங்கில் தமிழீழப் விடுதலைப்புலிகள் மீதான தடைகளுக்கு சிங்களம் அச்சாரம் இட்டுக் கொண்டிருந்தது.

இத்தடையானது ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் போராட்ட முன்னெடுப்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

தமிழர் தரப்பு – சிங்களத் தரப்பு – இந்தியா உட்பட மேற்குலகம் முக்கோண நிலையில் தமிழர் தரப்பின் குற்றங்கணா முனைந்த ஓரு தரப்பின் போக்கினை தனக்கு சாதகமாக பாவித்த சிங்களம் ஒட்டுமொத்த தமிழின அழிப்பினை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றியிருந்தது.

ஆனால் முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் சூழல் மாறிவிட்ட நிலையில் தமிழர் தரப்பின் குற்றங்கணா முனைந்தவர்கள் இன்று சிங்களத்தின் மீது குற்றங்காண்பதனை சமகாலத்தில் காணமுடிகின்றது.

தமிழர்களின் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமென சித்தரித்து தடைகளையும் பலாபலன்களையும் அனுபவித்திருந்த சிங்களத்தினால் இன்று சனநாய வழிமுறையூடான வடிவமாக தோற்றம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்கத்தின் மீது தடைகளை அனைத்துலக அரங்கில் தோற்றுவிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டுள்ளது.

1977ம் ஆண்டு வட்டுக்கோட்மைத் தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் என்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டினை வெறும் முழக்கமாவோ அல்லது வெறும் காகித அறிக்கையாகவோ அல்லாமல் அதற்கு வடிவம் கொடுக்கும் முகமாகவே ஆயுதப் போராட்டம் தொடர்சிகண்டது.

வெறும் கரந்தடிப் போராக அது நீடிக்காமல் அது மரபுரீதியான போர்முறையாக மாற்றங்கண்டு தமிழர்களின் நிலங்களை சிங்க பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டது மட்டுமல்லாது தக்கவைத்து அதில் ஓர் நடைமுறைத் தமீழீழ அரசும் நிறுவப்பட்டிருந்தது.

நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது நீண்டு செல்லும் பட்சத்தில் பலத்தின் அடிப்படையில் அதற்கான முழு அங்கீகாரம் அனைத்துல அரங்கில் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இன அழிப்பு போர் ஒன்றினை நடத்தி தமிழர்களின் உயிர்களை மட்டுமல்ல நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினையும் அழித்தொழித்தது சிங்களம்.

ஓர் அரசுக்குரிய இனம் தமிழினம் என்பதனை உலகின் முன் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசு பறைசாற்றியிருந்தது மட்டுமல்லாது தமிழகம் – மலேசியா என உலகப் பரப்பெங்கும் விரிந்துள்ள தமிழர்களின உறுதியான அரசியல் இருப்புக்கும் அது நம்பிக்கை சமைத்திருந்தது.

இந்நிலையில்தான் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்தொழிப்பதன் ஊடாக தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை அழித்துவிடலாம் என சிங்களம் நினைத்திருந்த வேளை தமிழர் தரப்பு முன்னிறுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஈழத் தமிழர்களின் சனநாயகப் போராட்ட வடிவம் பெருந்தலையிடியாக சிங்களத்தின் தலைகளில் வந்திறங்கியது.

இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துல அரங்கில் கிடைத்துள்ள அரசயில் வெளியில் சனநாயகபூர்வமாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற உயர்அரசியல் பீடமாக அது தேங்கிவிடாது நாளை மலரும் தமிழீழம் எத்தகைய வடிவத்தினைக் கொண்டது என்பதனை வெளிக்காட்டும் பொருட்டு தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்கி வருகின்றது.

உலகப் பரப்பெங்கும் உள்ள தமிழர்களின் கருத்துக்கள் ஊடாக உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனமானது 1977ம் ஆண்டு வட்டுக்கோட்டடைத் தீர்மானம் தொடக்கம் 1986ம் ஆண்டு காலப்பகுதயில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கை செயற்திட்ட வரைவாக இருந்த சோசலீச தமிழீழம் உள்ளடங்கலாக 2003ம் ஆண்டு சமாதான காலத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி வரைபு வரை யாவற்றையும் உள்ளடக்கியதான கேள்விக் கொத்தினை மக்கள் முன்வைத்து மக்கள் தீர்மானிக்கின்ற ஓர் வடிவமாக தமிழீழ சுதந்திர சாசனம் உருவாகி வருகின்றது.

சனநாயகபூர்வமாக உருவாகிவரும் இந்த சுதந்திர சாசனமானது சனநாயக போதகர்களாக விளங்குகின்ற சர்வதேசத்தின் முன் ஓர் ஆவணமாக முன்வைக்கும் போது எவருமே நிராகரித்து

விடமுடியாது.

மறுபுறம் தமிழீழம் என்ற தமிழர்களின் போராட்டத்திற்கான திசையினை தீர்மானிப்பவர்காளக தமிழர்களே உள்ளனர் அன்றி பிறர் அல்ல என்பதனை வழிவகுக்கும் பொருட்டு தமிழீழம் நோக்கிய தமிழர்களின் உறுதியான அரசியல் நிகழ்ச்சி நிரலாக தமிழீழ சுதந்திர சாசனம் உள்ளது.

இந்நிலையில்தான சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்ச ஈழம்வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர் என தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- சுதன்ராஜ் -

suthanraj by dm_51391b1182081