ஈழத்தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை உலகுக்கு முரசறையட்டும் : எழுகதமிழுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டறிக்கை !

எழுகதமிழ் எச்சிக்கூடல், உரிமை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்களது உணர்வின் வெளிப்பாடு என தங்களது தோழமையினை தெரிவித்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் அமெரிக்க, இலங்கைத் தமிழ்ச் சங்கம், US_TPAC, உலகத் தமிழ் அமைப்பு, ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளன.
தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படு; இக்கால கட்டத்தில் தாயகத்தில் எமது மக்களுக்கு கிடைக்கும் வரையறுக்கப்பட்ட அரசியல் வெளிக்குள், அவர்கள் வெளிப்படுத்தும் உரிமைக்குரல் எழுகதமிழ் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே சிங்கள பௌ;த மேலாதிக்கத்தை அங்கீகரித்து, சிறிலங்கா அரசு தருவதை ஏற்று வாழப்பழகுங்கள்’ என நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்மக்களுக்கு ஆதிக்க சக்திகளால் வழங்கப்படும் அச்சுறுத்தல்களுக்கும், அறிவுரைகளுக்கும் தமிழ்மக்கள் வழங்கும் தெளிவான பதிலாக எழுகதமிழ் அமையும் அவவ்விறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தலைமை தாங்குவோர் மக்களின் உணர்வுகளுடன் இணைந்து நிற்காமல் அதிகார மையங்களின் நலன் தாங்குவோராக மாறிப்போயின் அவர்களை தாண்டி மக்கள் தமது உரிமைப் போராட்டத்தை தமது கையில் எடுப்பார்கள் என்பதற்கு நல்தோர் உதாரணமாக எழுகதமிழ் அமையுமென அவ்வறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}