எழுக தமிழ் கவனயீர்ப்பு பேரணியீல் ஈழத் தமிழர் ஒருங்கிணய வேண்டியது காலத்தில் கட்டாயம்.. வரலாற்றிரலாற்றின் தேவை இயக்குனர் மு.களஞ்கியம் அறிக்கை

எழுக தமிழ் கவனயீர்ப்பு பேரணியீல் ஈழத் தமிழர் ஒருங்கிணய வேண்டியது காலத்தில் கட்டாயம்.. வரலாற்றிரலாற்றின் தேவை இயக்குனர் மு.களஞ்கியம் அறிக்கை

2
ஆயுதப்போராட்டத்திலே தோற்றுப்போனாலும் ஐனநாயகரீதியான அறப்போரிலே வெல்வோம் என்ற இலக்கோடு எழுக தமிழ் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் என் குருதி உறவுகளே உங்கள் அனைருக்கும் தமிழக மக்களின் சார்பிலே எனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முள்ளிவாய்கால் கொடுரத்திக்கு பிறகு தமிழினத்தின் முதுகெலும்பை ஒடித்து விட்டோம் என்கிற சிங்கள பேரினவாதஅரசின் கொக்கரிப்பாலும் தமிழர்களின் இராணுவபலம் அழிக்கப்பட்டுவிட்டதே என்ற விரக்தியிலும் உலகத்தமிழினம் ஒரு மனச்சோர்வுக்கும் மனஊனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
ஆயுதப்போராட்டத்தின் தோல்வியும் தமிழர் பிரதேசங்களிலே அகலகால் பதித்து ஆளமாகவேருன்றி நிற்கும் முப்படைகளின் நடமாட்டமும் தொடர் மிரட்டல்களும் ஆள்கடத்தல்களும் அங்கு வாழுகின்ற உங்களை ஒரு நிரந்தர அச்சத்திற்குள் வைத்திருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.
தாய் நிலத்தில் உள்ள ஒவ்வொருபிடி மண்ணையும் பாதுகாப்பதற்காக கடந்த காலத்திலே நீங்கள் அனைவரும் கொடுத்த விலைகள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை அவ்வாறு பெறப்பட்ட ஒவ்வொரு பிடிமண்ணும் இன்று சிங்களதேசத்தால் அபகரிக்கப்படுவதை பாரத்துக்கொண்டிருப்பது அறிவாகாது.
தற்போதய சூழலிலே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளையும் உலகின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தமிழ் மக்களின் ஐனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படும் எழுக தமிழ் பேரணியிலே அனைத்து ஈழத்து சொந்தங்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று உங்களில் ஒருவனாக உரிமையுடன் அழைக்கின்றேன்.
2009 யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வீதியிலே இறங்கிப் போராடிவருவதை ஊடகங்களிலே அவதானிக்கமுடிகிறது குறிப்பாக காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத் தரக்கோரியும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கப்படும் அறப்போராட்டங்களிலே பெண்களும் சிறுவர்களும் வீதியில் வந்து துணிச்சலுடன் போராடிவருகின்றனர் அவர்களிற்கு ஆதரவாக எழுக தமிழ் பேரணியிலே அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையையும் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்; மைத்திரி-ரணில் தலைமையிலான ஒன்றிணைந்த அரசானது நல்லாட்சி என்ற கோசத்துடன் சில தமிழ் அரசியல் தலைமைகளையும் சர்வதேச நாடுகளையும் தனது பிடிக்குள்வைத்துக்கொண்டு அய்நாமன்றத்திலே சர்வதேச விசாரணை என்ற விழிம்பிலிருந்த தமிழர் விவகாரத்தை உள்ளுர் பொறி முறைக்குள் இழுத்து வந்து மெல்ல மெல்ல நீதிப்படுகொலை செய்துவரும் ஏககாலத்திலேயே அதிகாரப்பரவலாக்கல் என்ற போர்வையிலே சிங்கள பௌத்த பேரினவாத அரசை மையமாகவைத்து ஒற்றை ஆட்சியை பலப்படுத்துவதற்கான புதிய அரசியல் சாசனத்தை எழுதி தமிழர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திரு ப்பதற்கும் முனைப்புக் காட்டிவருகின்றார்கள்.
சிங்களதேசத்தால் கடந்தகாலங்களில் எழுதப்பட்ட அரசியல் யாப்புக்களில் சிறுபாண்மைச் சமூகங்கள் ஒரம் கட்டப்பட்டதே வரலாறாக அறிகின்றோம் இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும்.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுஇலங்கையின் இறையாண்மைக்காக குரல்கொடுத்துக்கொண்டு சிங்களத்தின் குகைக்குள் கால்நீட்டி படுத்திருக்கும் துரோகத்தனங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழித்துக் கொள்வ தோடு தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்திலே நேர்மையுடனும் அர்பணிப்புடனும் களமாடிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பின்னால் அணிவகுத்துச் செல்ல வேண்டிய வரலாற்றுத்தேவையை ஈழத்தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நன்றி

Share On Facebook
Share On Twitter
Share On Google Plus
Share On Linkedin
Share On Pinterest
Share On Reddit
Share On Stumbleupon
Contact us
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}