தன்னகத்தே உள்ள வளங்களை கொண்டு தமிழ் சமூகம் முன்னேற வேண்டும்: யோகேஸ்வரன்

யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளங்களை அதிக உச்ச அளவில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் அதிபர் எஸ்;.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், விஞ்ஞானத்துறையை வளர்க்க வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட வல்லுனர்கள் தேவையாக உள்ளனர். எமது சமூகம் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானத்துறையோடு சம்பந்தப்பட்ட பாடங்களைத் தெரிவுசெய்து அந்த துறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் உயர்தர வகுப்புக்கு தொழில்நுட்ப பாடத்தை ஆரம்பிக்க பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டபோது, கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பாடசாலைகள் முற்று முழுதாகப் புறக்கணிக்கப்பட்டன. அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தப் புறக்கணிப்பைத் தீவிரமாக எதிர்த்ததினால் விமோசனம் கிடைத்தது.

மேலும், மாகாண கல்வியமைச்சராக தண்டாயுதபாணியும், கல்வி இராஜாங்க அமைச்சராக மத்திய அரசிலே தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். இவர்களின் உதவியுடன் கடந்த கால மாகாண அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் பாடசாலைகளை நாம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளங்களை அதிக உச்ச அளவில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share On Facebook
Share On Twitter
Share On Google Plus
Share On Linkedin
Share On Pinterest
Share On Reddit
Share On Stumbleupon
Contact us
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}