யாழ்.குடாநாட்டின் புகழ் சரித்திரப்புகழ் மிக்கதாக மாறவேண்டும்-மா.இளஞ்செழியன்

யாழ்.குடாநாட்டை சிறந்த ஓர் சரித்திரப் புகழ்கொண்ட இடமாக மாற்றி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைத்து செயல்பட்டால் சாதித்து காட்ட முடியும் என மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

சர்வோதயத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற சமாதான நீதவான்களிற்கானநிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரைநிகழ்த்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

குடாநாட்டில் சில இளைஞர்களால் விளைவிக்கப்படும் குழப்பங்களைக் கட்டுப்படுத்தி  சிறந்த ஓர் சரித்திரப் புகழ்கொண்ட இடமாக மாற்றி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைத்து செயல்பட்டால் நிச்சயமாக முடியும்.

இலங்கையில் உள்ள அனைத்தும் பல்கலைக்கழகங்களும் குடாநாட்டு மாணவர்களால் நிரம்பிய காலம் ஒன்று இருந்தது. மீண்டும் அந்தக் காலத்தினை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலை வரவேண்டுமானால் குடாநாட்டினை ஓர் ஆண்டுக்குள் சீர் தூக்குவதே எனது நோக்கம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும்தேவை.

குடாநாட்டின் நிலவரம் தொடர்பில் கடந்த மாதங்களில் என்னிடம் கேட்கப்பட்ட வினக்களிற்கு பதிலளிக்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலமை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 15 நாட்களாக குடாநாட்டில் குற்றச்செயல்கள் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

இங்குள்ள மாணவர்களை  கல்விமூலம் எதிர்கால நாயகர்களாக மாற்றுவதும் எனது கடமை. அதற்கு பெற்றோருடன் அனைவரும் ஆலோசணை வழங்குங்கள் சட்ட ஒழுங்குகளை மீறவேண்டாம் என எடுத்துரையுங்கள்.

இந்த நாட்டில் சட்டத்தின் பிரகாரம் பல விடயங்களிற்கும்  தெளிவான தண்டனை எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணின் கையை பிடித்து இழுத்தால் 05 வருடம் , கடத்தினால் 07 வருடம் , கற்பழித்தால் 20 வருடம் சிறைத்தண்டனை அதேபோல் கொலை செய்தால்மரணதன்டனை என சட்டத்தில் எழுத்தில்உள்ளது.

அதேபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பாதுகாக்கும் சட்ட உரிமையும் உண்டு. அதே நேரம் வழங்கப்படும் சுதந்திரம் என்பதற்கும் வரையறை உண்டு ஒருவர் தனது கையை மற்றவரின் மூக்கு வரை கொண்டு செல்லவே அவருக்கு சுதந்திரம் உண்டு . ஆனால் பிறரின் மூக்கினைத் தொடுவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் உண்டு.

மூக்கினைத் தொட்டால் உனது மூக்கினை உடைப்பது சட்டம். அது சட்டத்தின் சுதந்திரம். சட்டத்தின் பிரகாரம் ஒருவனுக்கு கொலைக்கான அச்சுறுத்தலுடன் மரணம் விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் அதனை விளைவிக்க முயல்பவனை கொலை செய்யலாம். அது தற்காப்பு உரிமை மரணம்.

குடாநாட்டில் நான் கடமையை பொறுப்பேற்றதன் பின்னர் 9 மரணதண்டணைகளும் , 20 பேருக்கு 10 வருடத்திற்கும் அதிகமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் இடம்பெறும் சமூக விரோதக் குற்றச் செயல்களிற்கு ஆலோசணை கிடையாது. தண்டனைத் தீர்ப்புக்களே . இதன் மூலம் சிறந்த ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டியது எனது கடமையாகும்.

எனவே சகல சட்ட ஆலோசணைகளையும் மாணவர்களிற்கு சொல்லி அவர்களை வழிநடாத்தி சிறந்த மாணவர்களாக திகழ்ந்து நாட்டின் சகல பல்கலைக்கழகங்களையும் நிரப்பும் நிலை உருவாகவேண்டும்.

இதன் மூலம் குடாநாட்டின் புகழ் மீண்டும் சரித்திரப்புகழ் மிக்கதாக மாறவேண்டும். அதனை மாற்றுவோம். என்றார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}